முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சுகிசிவம் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் - இந்து மக்கள் கட்சி
பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஆன்மீக சொற்பொழிவாற்ற சொற்பொழிவாளர் சுகிசிவம் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் - இந்து மக்கள் கட்சியினர்
பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஆன்மீக சொற்பொழிவாற்ற சொற்பொழிவாளர் சுகிசிவம் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
TVK Flag: நாளை முதல் கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும்- த.வெ.க தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பு
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் ஊன்றும் விழா கடந்த 3ஆம் தேதி துவங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் ஐந்து ஆய்வகங்கள், 1300 ஆய்வு கட்டுரைகள், இது தவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 4 நீதிஅரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்களாக வெளியிடப்படவுள்ளது.
இதனை ஒட்டி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் வருகின்ற முருகன் மாநாட்டில் அன்றைய தினமான 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் வசிக்கும் இந்து மக்களை இந்திய அரசு மீட்கவேண்டுமென பழனி தண்டாயுதபாணி சுவாமியிடம் மனு அளிக்க உள்ளதாக கூறி இந்து மக்கள் கட்சி , இந்துமகா சபா ,இந்து திருக்கோவில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பழனி நகர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
Flipkart ல் அதிக தள்ளுபடியில் iPhone 15 விற்பனை; மேலும் மலிவாக பெறுவதற்கான டிப்ஸ்..!
அப்போது பேசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மலைக்கோட்டை தர்மா, தொடர்ந்து பழனி நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவாளர் ஆன சுகிசிவம் அவர்கள் அத்தி வரதருக்கு புத்தி வராதா என்றும் , ஆதினங்களை தவறுதலாக பேசியுள்ளார்.
Astrology: கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
தமிழகர்களின் கலாசாரமான குலதெய்வ வழிபாட்டை கேவலமாக பேசியுள்ளார். இந்துக் கோயில்களில் ஹிந்துக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை விமர்சனம் செய்துள்ளார். இதனால் சுகிசிவம் முருகன் மாநாட்டிற்கு வருவதை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் சுகிசிவம் மாநாட்டிற்கு வந்தால் பகிரங்கமாக கருப்பு கொடி காட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.