மேலும் அறிய
ஜெர்மனியில் மாதம் ரூ.3 லட்சம் சம்பளம்! தாட்கோ வழங்கும் ஜெர்மன் மொழி பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு!
ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சிக்கான ஒன்பது மாத கால அளவு, விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோ சார்பில் வழங்கப்படும்.

ஜெர்மன் மொழி பயிற்சிக்கு அழைப்பு
Source : whats app
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்
German Language Test Training
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெறுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராகவும், பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing), பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ (GNM Diploma), பி.இ (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (மின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE) & பி.டெக், தகவல் தொழில் நுட்பம் (B.Tech IT) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 21 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமலும் என்ற விதிமுறைகளுக்குட்பட்டு இருத்தல் வேண்டும். மேலும், இப்பயிற்சிக்கான ஒன்பது மாத கால அளவு, விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோ சார்பில் வழங்கப்படும்.
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து, அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000- முதல் ரூ.3,00,000- வரை வருவாய் ஈட்டிடும் வகையில் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். எனவே, ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















