மேலும் அறிய
நடிகர் விஜய்... எம்.ஜி.ஆர்., படத்தை சும்மா யூஸ் பண்ணிக்கலாம் - செல்லூர் ராஜூ கலாய்
மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் இருந்தும், எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை, எங்களுடைய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
விஜய், எம்.ஜி.ஆர் புகைப்படத்தை காட்டி, சினிமாவில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் பயன்படுத்தலாம். ஆனால் அதிமுக தொண்டர்களை யாரும் பிரிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நான் அமைச்சராக இருந்த போது பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். சாலை, ரேஷன் கடை, பள்ளிக் கட்டடம் அமைப்பு, தண்ணீர் போர் அமைப்பு, சுகாதார அமைப்பு, நாடகமேடை, நடைபாதை, பூங்கா போன்ற மக்கள் திட்டங்களை செய்துள்ளோம். ஆனால் திமுக அமைச்சர்கள் டிபன் பாக்ஸை கொண்டு வந்து கொடுக்கின்றனர். பத்திரபதிவுத் துறை அமைச்சரின் கிழக்கு தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டம் கூட நாங்கள் கொண்டு வந்தது. நாங்கள் கொண்டுவரும் திட்டங்களை காலதாமதப்படுத்தினர். புது திட்டங்களை கொண்டுவரவில்லை, என்றால் கூட பரவாயில்லை., நல்ல திட்டங்களை தடுத்தனர்” என்றார்.
விஜய் வாகனத்தில் எம்ஜிஆர் படம் உள்ளது என்பது குறித்த கேள்வி.?
எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி, சினிமாவில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம். அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. விஜய்க்கு எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லுவார். புயல் மையம் கொண்டுள்ளது, என்று சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.
“நாட்டில் ஈ.டி ரெய்டு நடந்துள்ளது. பணத்தை சபரீசனும், துணை முதல்வரும் எங்கு வைத்துள்ளார்கள் என்ற ஆடியோ வெளியே வந்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி நான்கு வருடமாகிவிட்டது அதனை திறக்க வக்கில்லை” - என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சனம் செய்தார்.
விஜய் பிரச்சாரத்திற்கு தடைகள் குறித்த கேள்விக்கு.
ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற ஒத்துழைப்பு வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள் அது முடியாது. யாராச்சும் கலைஞர் ஆட்சி அமைப்போம் என சொல்கிறார்களா. அதிமுக பற்றிதான் பேசுகிறார்கள் தவிர திமுக பற்றி யாராவது பேசுகிறார்களா?. டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா. உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார்”. எனவும் விமர்சனம் செய்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















