மேலும் அறிய

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை.. தீபாவளி முன்னிட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை!

ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை - என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பயணிகள் தங்களின் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அதிக அளவில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் அக்டோபர் 17 அக்டோபர் 21 வரை கூடுதல் பயணச்சீட்டு பதிவு சாளரங்கள், தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை விரைவாக இயக்க கூடுதல் ஊழியர்கள், ரயில் நிலையங்களில் தேவையில்லாத கூட்டத்தை தவிர்க்க நுழைவு வாயில்களில் தீவிர பயண சீட்டு பரிசோதனை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்

பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், தமிழக ரயில்வே காவல்துறை பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வார்கள். பயணிகளின் பாதுகாப்பாக பயணத்தை உறுதி செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பையும் ரயில்வே நிர்வாகம் நாடுகிறது. அந்த வகையில் ரயில்களில் பயணத்தின் போது ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகள், வெடிப் பொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ரயில்வே சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

இதை மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்களின் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். எனவே பயணிகள் தங்களின் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: 3ஆம் நூற்றாண்டு பாண்டியர் வரலாறு வெளிச்சத்திற்கு!
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: 3ஆம் நூற்றாண்டு பாண்டியர் வரலாறு வெளிச்சத்திற்கு!
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் ‘மதுரம் 2026’ நிகழ்வு !
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் ‘மதுரம் 2026’ நிகழ்வு !
கீழடி, கல்வி மேம்பாடு: முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை !
கீழடி, கல்வி மேம்பாடு: முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை !
பழனி கோயில் பத்திரப்பதிவு முறைகேடு: நிர்மல்குமார் மீது மூர்த்தி கடும் குற்றச்சாட்டு!
பழனி கோயில் பத்திரப்பதிவு முறைகேடு: நிர்மல்குமார் மீது மூர்த்தி கடும் குற்றச்சாட்டு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget