மேலும் அறிய
Advertisement
மதுரையில் பிறந்து சிலநாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவத்தால் பரபரப்பு !
’’அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணைக்கு பின்பு தான் முழு விபரம் தெரியவரும்”
மதுரை பீ.பீ.குளம் உழவர்சந்தை அருகேயுள்ள இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்காக மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பகுதியில் நடந்துசென்றுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது. இதனை பார்த்த இளைஞர் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
இது குறித்து காவல்துறையினர் சிலர் நம்மிடம் கூறுகையில் ”மதுரை பி.பி.குளம் பகுதி மிகுந்த போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உழவர் சந்தை ஒன்று செயல்பட்டுவருகிறது. இதனால் கூட்ட நெரிசல் நிறைந்த பகுதியில், குழந்தையின் தலையை நாய் ஒன்று கவ்விக் கொண்டு சென்றுள்ளது. அப்போது வங்கியில் பணம் எடுப்பது தொடர்பாக அப்பகுதிக்கு வந்த இளைஞர்கள் அதனை பார்த்து அதிர்ந்து போனார். இதனை தொடர்ந்து காவல் துறையினரிடம் நடந்தை கூறினார். ஆனால் அந்த குழந்தை குறித்த தகவல் அவருக்கு தெரியவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணைக்கு பின்பு தான் முழு விபரம் தெரியவரும்” என கூறினர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
மேலும் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில்...,” பச்சிளம் குழந்தையின் தலையை பார்த்து மிரண்டு போனோம். இளைஞர் கொடுத்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். நாய் குழந்தையின் தலையை தூக்கியது குறித்து தகவல் யாருக்கும் தெரியவில்லை. சிலரிடம் மட்டும் காவல்துறையினர் தகவல் பெற்றுச் சென்றுள்ளனர். தகவல் தெரிந்தால் உடனே போன் செய்யவும் என அறிவுறுத்தியுள்ளனர். வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது என கூறினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion