OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை சந்தித்த நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவின் தூதுவையும் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ் மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வம், தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு எந்த கட்சியிலும் இல்லாமல் தவித்து வருகிறார். அதிமுகவில் 2021ஆம் ஆண்டிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக அதிமுகவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார் ஓபிஎஸ், இதனையடுத்து பல சட்ட போராட்டங்கள் நடத்தினாலும் எந்த வித பாசிட்டிவான தீர்ப்பும் கிடைக்கவில்லை.
அதிமுகவில் மீண்டும் இணைய ஓபிஎஸ் போட்ட பிளான்
இதனையடுத்து எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் எனவும் ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் அதற்க்கும் எந்த வித பதிலையும் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு வாய்ப்பே இல்லையென தெரிவித்து விட்டார். இதனையடுத்து தான் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார் ஓபிஎஸ். இந்த நிலையில் தன்னுடன் இருந்த மூத்த நிர்வாகிகளும் இனியும் இங்கிருந்தால் எந்த வித நன்மையும் கிடைக்க வாய்ப்பு இல்லையென ஒருவர் பின் ஒருவராக திமுக மற்றும் மாற்று கட்சிக்கு பல்டி அடித்து வருகிறார்கள்.
இறுதியாக அதிமுகவில் இருந்து தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரும் தன்னுடன் இனைந்து அதிமுக ஒருங்கிணைப்பிற்காக போராடுவார் என எதிர்பார்த்த ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்து விட்டு திடீரென நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். இதனையடுத்து அந்த வாய்ப்பும் முடிந்த போனதையடுத்து ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவில் இணைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
புதிய கட்சியை தொடங்கும் ஓபிஎஸ்
பாஜகவை ஓபிஎஸ் நம்பியிருந்த நிலையில், அமித்ஷாவின் உத்தரவின் பேரில் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கட்சியில் மட்டுமல்ல கூட்டணியிலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை இணைக்க வாய்ப்பில்லையென தெரிவித்துள்ளார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், இனியும் அதிமுகவில் இணைய காத்திருக்க தேவையில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வேறு ஒரு கூட்டணியில் இணையும் வகையில் தற்போது நடத்தி வரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவை கட்சியாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான முடிவை டிசம்பர் 15ஆம் தேதி அறிவிக்க ஓபிஎஸ் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி தனது கட்சி பெயரையும், தனது அடுத்தக்கட்ட திட்டம் தொடர்பாகவும் அறிவிக்க உள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணியில் இணைந்து அதிமுகவை எதிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















