watch video | மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
நில தானங்கள் சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்டால் திருநாமத்துக்காணி என்றும், பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்டால் திருவிடையாட்டம் என்றும், சமணம், புத்த பள்ளிக்கு வழங்கப்பட்டால் பள்ளி சந்தம் என அழைக்கப்படும்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியைச் சேர்ந்த பாபு , ஜான் மருது ஆகியோர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் ரமேஷ், ஸ்ரீதர் ஆகியோர் பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோயிலில் இரண்டு பழமையான துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இரண்டு கல்வெட்டுக்களும் கி.பி 700 ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது.
#abpnadu விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியில் கி.பி.13 ம் நூற்றாண்டை சேர்ந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தை சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு . இதனை தொல்லியல் ஆர்வலர் முனீஸ்வரன் ஆய்வு செய்தார்#தொல்லியல் | @DrKARUMURUGESA3 pic.twitter.com/aDACqhcqWQ
— Arunchinna (@iamarunchinna) March 5, 2022
இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது : பிற்கால பாண்டிய மன்னர்களின் தலை சிறந்தவர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216- 1238). இவர் சோழர் ஆதிக்கத்தில் இருந்து மதுரையை மீட்ட பெருமைக்குரியவர். இவர் ஆட்சி காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கு, நந்த தீபம் ஏற்றுவதற்கு, சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு, கோவில் பராமரிப்புகளுக்கும், பல ஏக்கர்களில் நஞ்சை, புஞ்சை நிலங்களை கோயில்களுக்கு (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது. நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் கோவில் பராமரிக்கப்பட்டது. இவற்றை தேவதானம் என்று அழைப்பர். சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நில தானம் திருநாமத்துக்காணி என்றும், பெருமாள் கோயிலுக்கு வழங்கும் நில தானம் திருவிடையாட்டம் என்றும், சமணம் புத்த பள்ளிக்கு வழங்கும் நில தானம் பள்ளி சந்தம் என அழைக்கப்படும்.
#Abpnadu | விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியில் கி.பி.13 ம் நூற்றாண்டை சேர்ந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தை சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு . இதனை தொல்லியல் ஆர்வலர் முனீஸ்வரன் ஆய்வு செய்தார்.#madurai | @reportervignesh | @SRajaJourno | @hkanji pic.twitter.com/Ze8uIJCCEC
— Arunchinna (@iamarunchinna) March 5, 2022
கல்வெட்டு செய்தி: சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் 4.5 அடி நீளம் 1.5 அடி அகலம் 9 வரி கொண்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டில் ஸ்ரீ மாறன் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் தேவர்க்கு யாண்டு என சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கல்வெட்டு வரிகளுடன் தொடங்கும் கல்வெட்டு ஈஸ்வரமுடைய நாயனார் என்ற சிவன் பெருமாள் கோவிலுக்கு பேரிகை, சங்கு மற்றும் பூஜை செய்வதற்கான நிலங்களை குறியீடு களாகவும், அரை மா, அரைக்காணி, முந்திரி, கீழரை போன்ற நில அளவை முறையும் நிலத்திற்கு தேவையான நீர் பாசன செய்யும் முறையும் பொறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவிடையாட்டத்திற்கு கிழக்கெல்லையும், மேற்கு வாய்க்கால்களுக்கு தென்கிழக்கு எல்லையும் திருவிடையாட்டத்திற்கு மேற்கு எல்லை செங்குளத்தில் வடக்கு எல்லை என நிலத்தின் நான்கு எல்லைகளை குறிப்பிட்டு விளைச்சல் பொருள்களை மாகனத் தேவனன் தமிழ்நாட்டரையன் என்பவன் கோவிலுக்கு இவ்வுலகம் உள்ளவரை தானம் வழங்க வேண்டும் குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு கல்வெட்டு :
கோயிலின் முன்பு குளத்தங்கரையில் 1 அடி அகலம்,4 அடி நீளம், 6 வரி கொண்ட கருங்கலில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது .நிலத்தின் எல்லை , குளம், இறையிலி போன்ற சொற்கள் இருப்பினும் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுமையான பொருளை அறிய முடியவில்லை. இக்கல்வெட்டின் எழுத்தை வைத்து இதன் காலம் கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். என்றார்கள்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காதலியை கரம் பிடிக்க தந்தையை இழந்த காதலன்... காதலியின் தந்தை வெறிச்செயல்...!