மேலும் அறிய
Advertisement
காதலியை கரம் பிடிக்க தந்தையை இழந்த காதலன்... காதலியின் தந்தை வெறிச்செயல்...!
பெண்ணின் தந்தை மாயாண்டி மதுரை பெரியார் பேருந்து நிலைய நுழைவாயில் முன்பாக நின்றுகொண்டிருந்த ராமச்சந்திரனை கழுத்தை அறுத்து படுகொலை
மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் இவரது மகன் சிவபிரசாத் (23) என்பவருக்கும் அதே பகுதியில் வசிக்கும். மாயாண்டி என்பவரின் மகள் சினேகா (20) ஆகிய இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெவ்வேறு சமுதாயம் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து இருவரும் சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். இதனையடுத்து இரு தரப்பு பெற்றோரையும் காவல்துறையினர் அழைத்த நிலையில் சிவபிரசாத்தின் பெற்றோர் காவல்நிலையத்திற்கு வந்த நிலையில், சினேகாவின் பெற்றோர் வரவில்லை, இதனையடுத்து சிவபிரசாத்தின் பெற்றோருக்கு அறிவுரை கூறி காதல் ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர்.
#Abpnadu | மதுரையில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு காதலனின் தந்தையை பேருந்து நிலைய வாசலில் வைத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த காதலியின் தந்தை கைது.@reportervignesh
— Arunchinna (@iamarunchinna) March 5, 2022
| #madurai | #crime
| @LPRABHAKARANPR3
| @RevathiM92 | #Abpnadu | @msureshkumar006 | @erodeelavarasi pic.twitter.com/ayjXW7mkyf
கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் - Neet exam | 'சிறப்பு மருத்துவ வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' - சிவகங்கை மாணவியின் கோரிக்கை என்ன?
இந்நிலையில் சினேகாவின் தந்தை மாயாண்டி, மணமகனின் தந்தை ராமச்சந்திரனிடம் தனது மகள் குறித்து கேட்டபோது உரிய தகவல் அளிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி மதுரை பெரியார் பேருந்து நிலைய நுழைவாயில் முன்பாக நின்றுகொண்டிருந்த ராமச்சந்திரனை கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதனால் சம்பவ இடத்திலயே ராமசந்திரன் உயிரிழந்த நிலையில் இது குறித்து திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை காதலரின் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க - தேனியைத் தொடர்ந்து விருதுநகரிலும்.. சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்...
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion