மேலும் அறிய
பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து பாக்யராஜ் உயிரிழப்பு: வையாபுரி வேதனை!
பாக்கியராஜ், நடிப்பில் பிசியாக இருந்தார் நிறைய நிகழ்ச்சிகளில் அவருடன் கலந்து கொண்டுள்ளேன் மிகவும் எதார்த்தமான நல்ல நடிகர் நல்ல மனிதர் என்று பேசினார்.

நடிகர் வையாபுரி
Source : whatsapp
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் உயிரிழந்து கொஞ்ச நாள் தான் ஆகிறது. அதற்குள் அவரது சிஷ்யன் பாக்யராஜ் உயிரிழந்தது மிகவும் வேதனை தருகிறது. - திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி மதுரையில் பேட்டி.
மதுரையில் நகைச்சுவை நடிகர் வையாபுரி
மதுரை ஆனையூர் பகுதியில் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா அவர்களின் திருக்கோயில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி கலந்து கொண்டார். தொடர்ந்து வையாபுரி செய்தியாளர்களிடம் பேசுகையில்...," இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதை அமைப்பாளர் பல விருதுகள் வாங்கி இருக்கிறார், பாக்கியராஜ். எல்லா பேருமே சொல்லுவார்கள் அவருடைய திரைக்கதைக்கு என்றே தனியாக ரசிகர்கள் இருப்பார்கள். எந்த கதையாக இருந்தாலும் ஜனரஞ்சிகமாக பெண்களுக்கு பிடித்த மாதிரி குடும்பத்தை கவரும் மாதிரி பல படங்களையும் திரை கதைகளையும் கொடுத்தவர் பாக்கியராஜ். அவருடன் சேர்ந்து நானும் ஒரு படம் பணியாற்றியுள்ளேன். மிகப்பெரிய திறமைசாலி இயக்கம் , திரைப்பட தயாரிப்பு என அனைத்திலும் கற்றுத் தேர்ந்தவர் கற்று தேர்ந்தவர்.
திறமைசாலியாக இருந்தவர்.
மிகப்பெரிய திறமை பாக்கியராஜ் இயக்கம் தயாரிப்பு என அனைத்திலும் திறமைசாலியாக இருந்தவர். குருநாதர் இயக்குனர் இமயம் பாரதிராஜா நம்மை விட்டு பிரிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அவரது சிஷ்யன் பாக்கியராஜ் இறந்துவிட்டார் எங்கள் குருநாதர் பாரதிராஜா அவர்களும் இறந்துவிட்டார் பாக்கியராஜ் அவர்களும் இறந்துவிட்டார் மிகவும் வேதனையாக இருக்கிறது. அவரது ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார்
நிறைய நிகழ்ச்சிகளில் பாக்கியராஜ் சாரை நேரில் மீட் செய்திருக்கிறேன். ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி என்ற படத்தில் நான் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டியது, அதிலிருந்து என்னை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார் ஒவ்வொரு தடவையும் மிஸ் ஆகிறது. விரைவில் நீங்களும் நானும் இணைந்து பணியாற்றுவோம் என்று சொன்னார். அதுக்கப்புறம் அவர் நடிப்பில் பிசியாக இருந்தார். நிறைய நிகழ்ச்சிகளில் அவருடன் கலந்து கொண்டுள்ளேன். மிகவும் எதார்த்தமான நல்ல நடிகர் நல்ல மனிதர் என்று பேசினார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















