NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’அப்படி கல்வி நிறுவனத்திற்கு அவர் செலவு செய்ய வேண்டுமென்றால் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அந்த தொகையை விஜய் கொடுத்திருக்கலாமே என்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை’

இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தனித் தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறது. ஆனால், அவர் முதல்வர் ஆவதற்கு முன்னர், அதாவது கடந்த மார்ச் மாதத்தில் அரியலூரில் செயல்படும் கோகிலாம்பாள் கல்வி நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய் தனிப்பட்ட கடனாக கொடுத்துள்ளதாக அவரது பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு வித்திட்ட நிலையில், நீட் எதிர்ப்பு தீர்மானம் பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சூழலில் இது குறித்து முதல்வர் விஜய் விளக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன.
நீட் பயிற்சி மையத்திற்கு Fund செய்தாரா முதல்வர் விஜய் ?
அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டம் தாலுக்காவில் செயல்படும் இந்த கோகிலாம்பாள் கல்வி நிறுவனம் ’நாளைய மருத்துவர்களை உருவாக்கிடுவோம்’ என்ற டாக் லைனில் நீட் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர் விஜய், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் கோகிலாம்பாள் கல்வி நிறுவனத்திற்கு ஏன் 20 கோடி ரூபாய் நிதியை தர வேண்டும்? என்ற கேள்விகள் உருவாகியிருக்கின்றன. அதுவும் நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூரில் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்திற்கு முதல்வர் விஜய் 20 கோடி ரூபாய் கொடுத்திருப்பது தொடர் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. அனிதா இறந்தபோது இரவோடு, இரவாக அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய விஜயா, இப்படி நிட் தேர்வு பயிற்சி மையத்திற்கு Fund செய்திருக்கிறார் என்ற ஆச்சரியம் பொங்க கேட்கிறார்கள் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் கல்வியாளர்கள்.
நேரடியாக குறிப்பிடாத விஜய் - ஏன் கொடுத்தார் 20 கோடி ரூபாய் ?
நேரடியாக நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு பணம் அளித்துள்ளதாக விஜய் தன்னுடைய பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லையென்றாலும், பணம் பெற்றுக்கொண்டு கல்வியை வியாபாரமாக செய்யும் கோகிலாம்பாள் கல்வி நிறுவனத்திற்கு ஏன் நிதி கொடுத்திருக்கிறார் விஜய் என்ற கேள்வி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதிலும் கல்விக் கட்டணத்தில் ஆஃபர் என விளம்பரம் செய்து கட்டணம் வசூலிக்கும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்திற்கு இவ்வளவு பெரியத் தொகையை கொடுத்தது ஏன்? என்ற விமர்சனங்கள் இன்று வரை எழுந்துகொண்டிருக்கின்றன.
அப்படி கல்வி நிறுவனத்திற்கு அவர் செலவு செய்ய வேண்டுமென்றால் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அந்த தொகையை விஜய் கொடுத்திருக்கலாமே என்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை.
நீட் தேர்வை எதிகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் முயற்சியா?
ஒருவேளை நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அந்த தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் 20 கோடி ரூபாயை விஜய், அந்த கோகிலாம்பாள் கல்வி நிறுவனத்திற்கு விஜய் கொடுத்திருக்கும்பட்சத்தில், அவரே ஏன் நீட் பயிற்சி மையத்தை தன் பெயரிலேயே உருவாக்கி, இலவச பயிற்சி கொடுக்கக் கூடாது என்ற சந்தேகங்களும் தொடர்ந்து எழுந்து வந்திருக்கிறது.
View this post on Instagram
விளக்கம் கொடுப்பாரா முதல்வர் விஜய் ?
இது தொடர்பாக பல்வேறு கேள்விகளும், சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில்தான் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறது தவெக அரசு
இந்த நேரத்திலாவது எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் முன் வைக்கும் இந்த நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு விஜய் நிதி வழங்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு முதல்வர் விஜய் பதிலளித்து அதற்கு முற்றுபுள்ளி வைப்பாரா? அல்லது தன்னுடைய 20 கோடி ரூபாய் நிதி குறித்து தொடர்ந்து மவுனமாகவே இருப்பாரா என்ற வினா எழுந்திருக்கிறது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















