மேலும் அறிய
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.

மதுரைக் கிளை
Source : whatsapp
மனு குறித்து சமய அறநிலையத்துறை ஆணையர், கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஒரு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதி ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மனு தாரர் ராதாகிருஷ்ணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை
சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் சபை அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன், சென்னை , மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த டி. ஆர். ரமேஷ். மற்றும் செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி பாஸ்கர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் தாக்கல் இருந்த மனுக்களில், கரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இதில் 3,390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 3,085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு பத்திர பதிவுக்கான விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயில் நிலங்களை பட்டா மாறுதல் தனிநபர் பத்திரப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால், கோவில் நிலங்கள் அனைத்தும் பறிபோக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்தும், அதுவரை பத்திரப் பதிவுக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது அரசு தரப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன் தாக்கல் செய்த மனுவில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இதே கோரிக்கையுடன் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறினார்.
வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கரூர் கோவில் நிலம் தொடர்பான பொதுநல மனுக்களில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஒரு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















