மேலும் அறிய

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!

ஈரானிய துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற பனாமா நாட்டுக் கொடி கொண்ட கப்பல் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. எச்சரிக்கைகளை புறக்கணித்ததைத் தொடர்ந்து, அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானில், தங்கள் முற்றுகையை உடைக்க முயன்ற கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. பனாமா நாட்டுக் கொடியை ஏந்திய கப்பல் ஒன்று, ஹெலிகாப்டரிலிருந்து சுடப்பட்டது. இந்த சம்பவம் இன்று நிகழ்ந்தது. பனாமா நாட்டுக் கொடியை ஏந்திய கப்பல் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை உடைக்க அந்தக் கப்பல் முயன்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரி கூறியத என்ன.?

இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்ட அந்த அமெரிக்க அதிகாரி, "ஈரானிய துறைமுகங்களுக்கு கடற்படை முற்றுகையை அமல்படுத்தியபோது, ​​கப்பல் குழுவினர் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கப்பலின் ரேடாரை நோக்கி சுட்டது. இதற்கிடையே, ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய அரசாங்கத்தின் மீது தொடர்ந்து பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. மேலும், இந்த நடவடிக்கை அந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்." என்று கூறியுள்ளார்.

ஈரானிய துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற பனாமா நாட்டுக் கொடி கொண்ட கப்பல் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வால்டர் ப்ளூம்பெர்க் தெரிவிக்கிறார். எச்சரிக்கைகளை புறக்கணித்ததால், அந்த கப்பல் தாக்கப்பட்டது. ஓமான் வளைகுடாவில், ஒரு அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர், கப்பலின் ரேடாரை நோக்கிச் சுட்டதில், கப்பலில் தீப்பிடித்தது. பின்னர் தீ அணைக்கப்பட்டது. வான்கார்ட் என்ற கடல்சார் பாதுகாப்பு நிறுவனம், அந்த கப்பலை வேலா நோவா என அடையாளம் கண்டுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் 17 மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

ஏமனில் ஹவுதி தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பேர்

இதற்கிடையே, இன்று அல் மாண்டேப் பகுதியில் ஒரு சிறிய சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதாகவும், இதில் மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் ஏமன் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. தான்சானியக் கொடியை ஏந்திய 'திஹாமா' என்ற கப்பல், ஏமனின் அல் மோக்கா கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத எறிபொருளால் தாக்கப்பட்டதாக, ஐக்கிய ராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு ஹவுதிக்களால் இந்த கப்பல் குறிவைக்கப்பட்டது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் என மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்தபோது, ​​அந்த கப்பல் ஓமனின் சலாலாவிலிருந்து ஜிபூட்டிக்குச் சென்று கொண்டிருந்தது.

ஓயாத சண்டை

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், அதையே விரும்புவதாக ட்ரம்ப் கூறினாலும், மறுபுறம் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. தங்கள் மீது தாக்குதல் நடந்தால், பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அமெரிக்காவும் தாக்குதல்களை நிறுத்தாமல் இருக்கிறது. இரு தரப்பும் இப்படி இருந்தால், சண்டை எப்போது ஓய்வது என்ற கேள்வியே உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ட்ரம்ப் புதிதாக ஒரு விஷயத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது, அமெரிக்காவிடம் ஈரான் இழப்பீடு கேட்டுவந்த நிலையில், தற்போது, ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் ட்ரம்ப். இதன் மூலம், சண்டை இப்போதைக்கு முடியாது என்பது தெளிவாகிறது.

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Slams Iran: ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
Donald Trump Video:
"கார்க் தீவு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது"; வீடியோ பகிர்ந்த ட்ரம்ப்; மீண்டும் போர் பதற்றம்
US Iran War: “இன்னொரு தாக்குதல் மட்டும் நடத்திப் பாருங்க, அப்புறம்...“ அமெரிக்காவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை
“இன்னொரு தாக்குதல் மட்டும் நடத்திப் பாருங்க, அப்புறம்...“ அமெரிக்காவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை
Abbas Araghchi Vs Netanyahu: “அந்தாளு ஒரு பாம்பு, அமெரிக்காவ ஏமாத்தி போருக்குள்ள இழுத்துட்டு வந்தவரு“: நெதன்யாகுவை வெளுத்த அராக்சி
“அந்தாளு ஒரு பாம்பு, அமெரிக்காவ ஏமாத்தி போருக்குள்ள இழுத்துட்டு வந்தவரு“: நெதன்யாகுவை வெளுத்த அராக்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vanni Arasu:
Vanni Arasu: "முதலமைச்சர் விஜய் கொடுத்த துணிச்சல்லதான் நாங்க செயல்படுகிறோம்.." நெகிழ்ந்து பேசிய அமைச்சர் வன்னியரசு
Vijay PM Candidate : ’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
CM Vijay: மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
"இனி பொறுக்க முடியாது!" தனிப் பெரும்பான்மைக்கு போட்ட திட்டம்... சீக்ரெட் மூவ் நகர்த்தும் விஜய்!
TASMAC employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
Lexus ES 350h Hybrid Sedan: போடு சக்க.! 25 கிமீ-க்கு மேல் மைலேஜ்; புதிய ES 350h ஹைப்ரிட் செடானை இறக்கிய லெக்ஸஸ்; புதிய அம்சங்கள்
போடு சக்க.! 25 கிமீ-க்கு மேல் மைலேஜ்; புதிய ES 350h ஹைப்ரிட் செடானை இறக்கிய லெக்ஸஸ்; புதிய அம்சங்கள்
Trump Slams Iran: ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
7 Seater Turbo CNG: பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
Embed widget