மேலும் அறிய

சிவகங்கையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு: ரூ.60 ஆயிரம் நிவாரணம்!

மீட்கப்பட்ட 2 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதியிலிருந்து தலா ரூ.30,000- வீதம் 2 நபர்களுக்கு ரூ.60,000- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.

தேவகோட்டை தாலுகாவில் ஆடு மேய்க்கும் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட 2 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை ரூ.60 ஆயிரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

ஆடு மேய்க்கும் தொழிலிலிருந்து மீட்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் ஆடு மேய்க்கும் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட 2 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.60 ஆயிரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், வழங்கி தெரிவிக்கையில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை தொடர்பாக கொத்தடிமைத் தொழிலாளர் முறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான நலச்சங்க சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் திரு.தங்கவேலு த/பெ அம்மாசி என்பவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 24.06.2026 அன்று நேரில் அளித்த புகார் மனுவினைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் முறை விழிப்புணர்வு கண்காணிப்புக்குழுவினர் 24.06.2026 அன்று மாலை 5.30 மணிக்கு சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, திருப்பாக்கோட்டை குரூப், புலிக்குளம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

விடுதலைச் சான்று வழங்கப்பட்டது.

மேற்கண்ட ஆய்வில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெத்தநாச்சிபுரம் என்ற முகவரியைச் சேர்ந்த தங்கராசு மற்றும் அவரது மனைவி ஆதியம்மாள் ஆகிய இருவரையும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக வைத்துள்ளார் என்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) அவர்களால் விடுதலைச் சான்று வழங்கப்பட்டது.

கொத்தடிமை மறுவாழ்வு நிதியிலிருந்து பணம்

மீட்கப்பட்ட 2 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதியிலிருந்து தலா ரூ.30,000/- வீதம் 2 நபர்களுக்கு ரூ.60,000/- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும், மேற்கண்ட தங்கராசு மற்றும் அவரது மனைவி ஆதியம்மாள் ஆகிய இருவரையும் ஆடுமேய்க்கும் தொழிலில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக பணியில் வைத்திருந்த சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, காளையார்கோவிலைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் மீது கொத்தடிமைத் தொழிலாளர் (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் தேவகோட்டை தாலுகா, திருப்பாக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலரால் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget