மேலும் அறிய

திண்டுக்கல் - மயிலாடுதுறை இடையே புதிய பயணிகள் ரயில் சேவை தொடக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்திற்கும் , மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இடையேயான புதிய பயணிகள் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர்.

கொரோனா பரவல் காலக்கட்டத்தில் நோய் தொற்றும் உச்சத்தில் இருந்த போது ஏராளமான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு விதிமுறைகள் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நிலையில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் தற்போது ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லை, ஈரோடு பயணிகள் ரயிலும் தற்போது இயங்க தொடங்கியுள்ளது. இந்த ரயில் முன்பு நெல்லை, ஈரோடு, மயிலாடுதுறை இணைப்பு ரயிலாக இயக்கப்பட்டது. அந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வந்தடைந்தது. ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கான பெட்டிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டன.

Naga Chaitanya : நாக சைதன்யா இப்படிப்பட்டவர்.. சமந்தாவின் முன்னாள் கணவர் குறித்து உண்மையை உடைத்த கீர்த்தி


திண்டுக்கல் - மயிலாடுதுறை இடையே புதிய பயணிகள் ரயில் சேவை தொடக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

ஆனால் தற்போது நெல்லை - ஈரோடு இடையே ஒரு பாசஞ்சர் ரெயிலும், திண்டுக்கல், மயிலாடுதுறை இடையே ஒரு புதிய பயணிகள் ரயிலும் இயக்கப்படுகிறது. நெல்லை, ஈரோடுக்கிடையேயான ரயில் சேவையானது தினமும் காலை 11.12 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தடையும். 11.15 மணிக்கு ஈரோட்டுக்கு புறப்பட்டு செல்கிறது. எனவே அந்த ரயிலில் வரும் மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த பயணிகள், திண்டுக்கல்-மயிலாடுதுறை ரயிலுக்கு மாறி செல்லலாம். இதற்கு வசதியாக திண்டுக்கல்-மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படுகிறது.

Srilankan Crisis : இலங்கையில் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் ? மக்களின் கோரிக்கைகள்தான் என்ன?


திண்டுக்கல் - மயிலாடுதுறை இடையே புதிய பயணிகள் ரயில் சேவை தொடக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் திண்டுக்கல், மயிலாடுதுறை பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர். திண்டுக்கல், மயிலாடுதுறை இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் கூறினர். இந்த ரெயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, மஞ்சத்திடல், திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய ரயில் நிலையங்களில் அந்த ரயில் நின்று செல்கிறது.

Gotapaya To Maldives : மாலத்தீவுகளுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச...நடந்தது என்ன?

அதேபோல் மறுமார்க்கத்தில் காலை 11.25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு (ஈரோடு-நெல்லை ரயிலுக்கு முன்பு) திண்டுக்கல்லை வந்தடைகிறது. இதனால் மயிலாடுதுறை, திண்டுக்கல் ரயிலில் வரும் நெல்லை, மதுரை பயணிகள் எளிதாக ஈரோடு,நெல்லை ரயிலில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை தீபாவளி: வானில் வர்ணஜாலம்... புகைமூட்டத்தால் மூழ்கிய தூங்காநகரம்!
மதுரை தீபாவளி: வானில் வர்ணஜாலம்... புகைமூட்டத்தால் மூழ்கிய தூங்காநகரம்!
தளபதி விஜய்க்கு ஆரோக்கியம், மன அமைதி வேண்டி மெக்காவில் தவெக எம்எல்ஏ முஸ்தபா பிரார்த்தனை!
தளபதி விஜய்க்கு ஆரோக்கியம், மன அமைதி வேண்டி மெக்காவில் தவெக எம்எல்ஏ முஸ்தபா பிரார்த்தனை!
மதுரை டைல்ஸ் கடையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்களால் பெரும் சேதம் தவிர்ப்பு!
மதுரை டைல்ஸ் கடையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்களால் பெரும் சேதம் தவிர்ப்பு!
தீபாவளிக்கு பூக்கள் விலை தாறுமாறு உயர்வு! மல்லிகை கிலோ ரூ.2,500 – முழு விலை பட்டியல்!
தீபாவளிக்கு பூக்கள் விலை தாறுமாறு உயர்வு! மல்லிகை கிலோ ரூ.2,500 – முழு விலை பட்டியல்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Embed widget