மேலும் அறிய
Advertisement
"கம்யூனிஸ்ட் அழியாது; அதிமுகதான்...” - செல்லூர் ராஜூவிற்கு வெங்கடேசன் பதிலடி
தமிழ்நாட்டுக் கான உரிமைகள் பறிக்கப்படுகின்றது. அதனை எதிர்த்து போராடி உங்களது கட்சியை வளர்க்க பாருங்கள்- செல்லூர் ராஜூவிற்கு அட்வைஸ்.
ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு 46 கோடி ரூபாயை பாலம் கட்டுவதற்கு பெற்றுக் கொண்டு வந்துள்ளேன்.
ஏன் செல்லூர் ராஜூ கோவப்பட்டார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
துவரிமான் மந்தையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த போது மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் பேசுகையில்..,” பாலம் கட்டுவதற்கு அனுமதியும், நிதி ஆணையும் பெற்று தந்தமைக்காக ஊரின் சார்பில் நன்றி அறிவிப்பு செய்து பதாகை வைத்துள்ளார்கள். நல்ல விஷயத்தை செய்தால் பாராட்ட வேண்டும் அதானே வழக்கம்!. அண்ணன் செல்லூர் ராஜூ அவர்கள், ஏற்கனவே இங்கு தான் அமைச்சராக இருந்தார், தற்பொழுது மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவரே முன்னின்ற இந்த பாலம் குறித்த வேலையை செய்திருக்கலாம். ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு 46 கோடி ரூபாயை பாலம் கட்டுவதற்கு பெற்றுக் கொண்டு வந்துள்ளேன்.
- தாத்தா, அப்பா வழியில் ஆன்மீக தொண்டு ; அமைச்சர் பி.டி.ஆர் விரும்பிச் செல்லும் கோயில்கள் எது தெரியுமா?
அதிமுக தான் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது
விருதுநகரில் துவங்கி மதுரை வழியாக திண்டுக்கல் வரை மிக அதிகமாக விபத்து நடக்கிற சந்திப்பு துவரிமான் சந்திப்பு. ஒரு மாதத்திற்கு 15 முதல் 20 விபத்துக்கள் நடக்கின்றன. தொடர் மரணம் நிகழும் சந்திப்பாக அது இருக்கிறது. அனைவரும் நம்ம வீட்டில் உள்ளவர்கள் நம் உறவினர்கள் நம்ம ஊரை சேர்ந்தவர்கள் அதனாலேயே அவ்வளவு பெரிய முயற்சி எடுத்து பாலத்தை கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் பாலம் கட்டுமான பணி துவங்க இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் அழிய மாட்டார்கள் செல்லூர் ராஜூ அண்ணே! கம்யூனிஸ்டு அழிந்து விடுவார்கள் என்று செல்லூர் ராஜூ சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணே நாங்கள் அழிய மாட்டோம். நடந்து முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் 1991ஆம் ஆண்டுக்கு பிறகு 35 ஆண்டுகள் பின்னர் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உங்கள் முன் வந்து நிற்கிறோம்.
உரிமைக்கு குரல் கொடுங்கள்
அதிமுக தான் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. மதுரை தொகுதியில் அதிமுக 3-வது இடத்திற்கு சென்றுள்ளது. அண்ணன் செல்லூர் ராஜூவிற்கு பணிவோடு சொல்லிக் கொள்வது பாசிச பாஜகவை எதிர்க்காத எந்த மாநில கட்சியும் கரைந்து காணாமல் போகும். அதுதான் கடந்த அரை நூற்றாண்டு இந்திய அனுபவம். கடைசியாக ஒரிஸா பிஜு ஜனதாதளம் வரை இது தான் நடந்துள்ளது. பாஜக இன்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மதுரையை வஞ்சிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தற்பொழுது வரை பிரச்னையாக தான் உள்ளது. மதுரை மெட்ரோ பணிக்கு பணம் தர மறுக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கான உரிமைகள் பறிக்கப்படுகின்றது. அதனை எதிர்த்து போராடி உங்களது கட்சியை வளர்க்க பாருங்கள் என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Virudhunagar DSP: அருப்புக்கோட்டை: போராட்டத்தில் கும்பலாக சூழ்ந்து பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்.! பெரும் பரபரப்பு..!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - “சீமான் ஒருபுறம், விஜய் மற்றொருபுறம்” சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேசிய அமைச்சர் நேரு..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion