Virudhunagar DSP: அருப்புக்கோட்டை: போராட்டத்தில் கும்பலாக சூழ்ந்து பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்.! பெரும் பரபரப்பு..!
Aruppukkottai DSP: விருதுநகர் மாவட்டத்தில் பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கும்பலாக சூழ்ந்து பெண் டி.எஸ்.பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர் வெட்டி கொலை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார்(33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். காளிக்குமார் சரக்கு வாகனத்தில் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி - இராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே திடீரென காளிக்குமார் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போராட்டத்தில் உறவினர்கள்:
காளிக்குமார் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
டி.எஸ்.பி மீது தாக்குதல்:
அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். டிஎஸ்பி காயத்ரியை தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதனால் பதட்டமான சூழல் நிலவியது. போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.
அருப்புக்கோட்டையில் மறியல் போராட்டத்தின்போது பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்!https://t.co/wupaoCz9iu | #Police #Virudhunagar #Aruppukkottai #tamilnadu #TNPolice pic.twitter.com/y86s9g8Nhy
— ABP Nadu (@abpnadu) September 3, 2024
போராட்டக்காரர்கள், போலீசாரை மீறி திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் , அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.