ஆயுத பூஜை முன்னிட்டு வியாபாரம் அமர்க்களம்; மதுரையில் மல்லி பூ விலை ரூ.1200 ஐ தொட்டது !
கடந்த சில நாட்களாக மல்லிக்கைப் பூ விலை குறைந்திருந்த சூழலில் தற்போது பூக்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது . இன்று (3.102022) மல்லிகைப்பூ விலை ரூ.1200 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில்கூட அதிகமாக இருந்து வருகிறது.
ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே அந்த வெள்ளி நிலா வந்து வந்த தேடுதே !@UpdatesMadurai | @SRajaJourno | @dhamurmm91 | @imanojprabakar | #Madurai pic.twitter.com/4hPkFXi0Tc
— arunchinna (@arunreporter92) October 3, 2022
அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இச்சந்தையில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களுக்கும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் டன் கணக்கிலான மலர்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த மலர் சந்தையில் இருந்து விமானம் மூலம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மதுரையைப் போல் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆய்த பூஜையை முன்னிட்டு மல்லிகைப் பூவின் விலை உயர்ந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்