Maridhas Arrest: மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு: பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு!
மாரிதாஸ் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.ஜே.பி மாவட்ட தலைவர் சரவணன் மீது 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூடிப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர தி.மு.க தகவல்தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்த யூடியுப்பரும் பாஜக ஆதரவாளருமான மாரிதாஸை மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் , தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெறhttps://bit.ly/2TMX27X*
இதனையடுத்து யூடியூப்பர் மாரிதாஸை மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்றம் நீதிபதி சுந்தர காமேஸ்வர மார்த்தாண்டம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாரிதாஸ் உத்தமபாளையம் கிளை சிறைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் மாரிதாஸ் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.ஜே.பி மாவட்ட தலைவர் சரவணன் மீது 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமூகவலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்தை பதிவிட்ட யூடியுப்பர் மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகர பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் உள்ளிட்ட 50பேர் மீது 6பிரிவுகளின் கீழ் திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.