TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
TN Voter List 2026: இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியான நிலையில், உங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? 3 வழிகளில் சரிபார்க்கலாம்?

தமிழ்நாட்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் இதை பிற்பகலில் வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வரும் தேர்தலில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் ஆவர். இதில்,
ஆண்கள் - 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925
பெண்கள் - 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838
3ஆம் பாலினம் - 7 ஆயிரத்து 617
இதில் உங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை 3 வழிகளில் சரிபார்க்கலாம். எப்படி பார்ப்பது?
வாக்காளர்கள் முதலில் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில், Search By EPIC, Search by Details, Search By Mobile ஆகிய 3 வழிகள் உள்ளன.
Search By EPIC
- இதில் வாக்காளர்களின் வாக்காளர் அடையா அட்டை எண்ணை (EPIC) உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து மொழி, மாநிலம் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
- கேப்ட்ச்சாவை உள்ளிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்க்கலாம்.

Search by Details
- இதிலும் மொழி, மாநிலம் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து வாக்காளரின் பெயர், உறவினரின் பெயர் (தந்தை அல்லது தாயின் பெயர்) ஆகியவற்றை வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பதுபோல் உள்ளீடு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து பிறந்த தேதி, பாலினம், மாவட்டம், தொகுதி ஆகியவற்றை உள்ளிட வேண்டியது முக்கியம்.
- பின்பு கேப்ட்ச்சாவை உள்ளிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்க்கலாம்.
Search By Mobile
- மூன்றாவது வழியாக உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட்டும், வாக்காளர் பட்டியலில் நம் பெயர் உள்ளதா என்று அறியலாம்.
- எனினும் இதற்கு தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் மொபைல் எண் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டியது முக்கியம்.
மேலே கூறிய 3 நடைமுறைகளையும் வாக்காளர் செயலி மூலமாகவும் மேற்கொள்ளலாம். குறிப்பாக, Voter Helpline என்ற செயலியில் அதை மேற்கொள்ள வேண்டும்.
திருத்தம் செய்வது எப்படி?
அதே நேரத்தில் உங்கள் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால், ஃபார்ம் 6 மூலம் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
அதேபோல உங்கள் பெயரில் பிழை அல்லது வேறு தகவல்களில் தவறுகள் இருந்தால், ஆன்லைன் மூலமாகவே சரிசெய்யலாம். எனினும் அதற்கு ஃபார்ம் 8 மூலம் விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
வேறு சந்தேகங்களுக்கு
வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு மாவட்ட தொடர்பு மையங்களன 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகமான 1800-4252-1950 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
























