மேலும் அறிய

”சாமியே சரணம் ஐயப்பா” விண்ணை பிளந்த சரண கோசம், மெய்சிலிர்க்க வழிபட்ட ஐயப்ப பக்தர்கள்

அலங்காரம் முடிந்ததும் ஐயப்பனின் மூலஸ்தானம் திறக்கப்பட்டதுமே சரியாக மாலை 6.43 மணிக்கு மகர ஜோதி தரிசனம் தெரிந்தது. 3 முறை ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதியையொட்டி நேற்று மாலை 6.43 மணிக்கு 3 முறை ஜோதி வடிவில் ஐயன் காட்சியளித்தார். சரண கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் மெய் சிலிர்க்க தரிசனம் செய்தனர்.

கேரள மாநிலத்தில் உள்ள பிரிசித்திபெற்ற கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சீசன் நேரங்களில் மட்டுமல்லாமல் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜைக்கான சீசன் தொடங்கியதையொட்டி ஆரம்ப கட்டத்திலிருந்தே பல்வேறு மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டும் அதிகரித்து உள்ளது.

ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்

மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகையின் போது மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. இந்த மகர ஜோதி தரிசனத்தை காண பொன்னம்பலமேட்டில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மகரஜோதியையொட்டி சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபாரணப்பெட்டி ஊர்வலம் ஜனவரி 12 ஆம் தேதி பகல் 1 மணிக்கு பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது. விர்சுவல் கியூ அல்லது ஸ்பாட் புக்கிங் செய்ய பக்தர்கள் மட்டுமே நிலக்கல் முதல் பம்பை செல்வதற்கு ஜனவரி 13 ஆம் தேதி, 14 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14 ஆம் தேதியான  நேற்று நிலக்கல்லில் இருந்து பம்பை வரை காலை 10 மணி வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்வதற்கு பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Rangoli Kolam: கோலங்கள்! கோலங்கள்! வாசல் எல்லாம் வண்ண வண்ண ரங்கோலி! மயக்கும் மாட்டுப்பொங்கல்!

”சாமியே சரணம் ஐயப்பா” விண்ணை பிளந்த சரண கோசம், மெய்சிலிர்க்க வழிபட்ட ஐயப்ப பக்தர்கள்

அது திருவாபரண பெட்டி ஊர்வலம் பெரியானைவட்டத்தை வந்தடைந்த நேரமாகும். இந்த நிலையில் திருவாபரணப்பெட்டி சரங்குத்திக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தது. அப்போது தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கேரள தேவசம் போர்டு அமைச்சர் ஆகியோர் அந்த ஆபரண பெட்டியை பெற்றுக் கொண்டனர். பிறகு அங்கிருந்து சன்னிதானத்திற்கு 18 படி வழியாக கொண்டு செல்லப்பட்டது. (18 படி வழியாக இருமுடி இல்லாமல் அனுமதிக்கப்படுபவர்கள் இந்த ஆபரண பெட்டியை கொண்டு செல்வோருக்கு மட்டும்தான்)

Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!

பின்னர் கதவுகள் மூடப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஐயப்பன் ராஜ அலங்காரத்தில் காட்சி தந்தார். அலங்காரம் முடிந்ததும் ஐயப்பனின் மூலஸ்தானம் திறக்கப்பட்டதுமே சரியாக மாலை 6.43 மணிக்கு மகர ஜோதி தரிசனம் தெரிந்தது. 3 முறை ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். இந்த தருணத்தை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்ததற்கு பலன் கிடைத்தது. அப்போது ”சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற சரண கோஷம் விண்ணை பிளந்தது. பக்தர்களும் மனம் குளிர சன்னிதானத்தை விட்டு கிளம்பினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget