Manjalar Dam: 53 அடியை எட்டிய மஞ்சளார் அணையின் நீர் மட்டம்.. கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 53 அடியை எட்டியதால் தேனி - திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.
மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 53 அடியை எட்டியதால் தேனி - திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பெருமாள் மலை, பாலமலை, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.
IND vs AUS 3rd ODI LIVE: 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா... அதிரடி காட்டுவாரா மேக்ஸ்வெல்?
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 52.85 அடியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 1 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 53 அடியை எட்டியதால் பொதுப்பணித் துறையினர் தேனி மாவட்டத்தின் மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி கல்லுப்பட்டி, மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான தும்மலபட்டி, ஊத்தங்கல் புதுப்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுப்பணித்துறையினர் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Thiruvannamalai: அண்ணாமலையார் கோவில் கோபுர பிரம்மதேவன் சிலை உடைந்து விழுந்தது - பக்தர்கள் சோகம்
மேலும் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அனைத்து நீர்வரத்து 117 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. அணையில் நீர் இருப்பு 385 மில்லியன் கண்ணாடியாக உள்ளது.
Manipur AFSPA: மணிப்பூரில் நிலவும் பதற்றம்.. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிப்பு
தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.
வைகை அணை
நிலை- 48.62 (71)அடி
கொள்ளளவு:1818 Mcft
நீர்வரத்து: 102 கனஅடி
வெளியேற்றம் : 69குசெக்வெசிட்டி:2511 Mcft
சோத்துப்பாறை அணை:
நிலை- 88.56 (126.28) அடி
கொள்ளளவு: 47.78 Mcft
நீர்வரத்து: 8.9 கனஅடி
வெளியேற்றம்: 3 கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-34.40 (52.55)அடி
கொள்ளளவு:31.90 Mcft
வரத்து: 0 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.