மேலும் அறிய

Manipur AFSPA: மணிப்பூரில் நிலவும் பதற்றம்.. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிப்பு

ராணுவ முகாம் போல் காட்சி அளிக்கும் இடத்தில், மாயமான இரண்டு மாணவர்களின் உடல்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் நாட்டையே உலுக்கியது.

மணிப்பூர் இனக்கலவரம்:

இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது. மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது. 

இச்சூழலில், இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 6 ஆம் தேதி, பதின் பருவத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களும் மாயமாகியுள்ளனர். இந்த சூழலில், ராணுவ முகாம் போல் காட்சி அளிக்கும் இடத்தில், மாயமான இரண்டு மாணவர்களின் உடல்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு உறுதி அளித்தபோதிலும், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூரில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளித்தாக்கில் அமைந்துள்ள 19 காவல்நிலையங்களை தவிர்த்து மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் பதற்றமானவை என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. பல்வேறு தீவிரவாத/கிளர்ச்சிக் குழுக்களின் வன்முறை செயல்களால் முழு மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு நிர்வாகத்திற்கு உதவ ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவது தேவையாகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு களத்தில் நிலைமையை விரிவாக ஆய்வு செய்வது வசதியாகிறது. எனவே, இது போன்ற முக்கியமான விஷயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன், 'பதற்றமான பகுதி' என்ற நிலையை திரும்ப பெறுவது பொருத்தமானதல்ல" என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Embed widget