மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
”தாய் தகப்பனை விட அவர் பெரிய ஆள் இல்ல” : விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்த அர்ஜுன் சம்பத்..
’மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட வேண்டும்’- அர்ஜுன் சம்பம்
ஆதீனம் - அர்ஜுன் சம்பத்
மதுரை ஆதீனத்திற்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல் - மாநில அரசு பாதுகாப்பு வழங்காவிட்டால் மத்திய அரசிடம் பாதுகாப்பு கேட்போம், அமைச்சர் சேகர்பாபு மதுரை ஆதீனம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் இந்து மக்கள் கட்ணி தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “மதுரை ஆதீனத்திற்கு அரசியல்வாதிகளாலும் நடிகர்களின் ரசிகர்களும் இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளுகிறார் என்றும் நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் மதுரை ஆதீனத்தை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார். இதுஒரு அபாயகரமான போக்கு. மதுரை ஆதீனத்திற்கு அரசியலுக்கும் பெரிய தொடர்பு கிடையாது அவர் அரசியல் பேசவில்லை. விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர் தாய் தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் ஒன்றும் கிடையாது. விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் எனவும்,
எப்பொழுதும் போல மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் வழியிலே தன் பணிகளை செய்து வருகிறார் இந்து சமய அமைப்புகள் அவருக்கு ஆதரவாக உள்ளது அவர் எல்லா ஆன்மீக சமய அமைப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். அறநிலையத் துறை அமைச்சரே பாய்வோம் என்று சொல்லியுள்ளார்.
ஆக இந்த காரணத்தால் மத்திய அரசு மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் மதுரை ஆதீனத்தை மிரட்டுவது போல் பேசி வருகிறா.ர் அவருக்கும் எனது வன்மையான கருத்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ரேஷன் கடை ஊழியர்கள், செவிலியர்கள் உரிமைக்குப் போராடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது.
![”தாய் தகப்பனை விட அவர் பெரிய ஆள் இல்ல” : விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்த அர்ஜுன் சம்பத்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/4408d2a219411c01057fc568ae22862e_original.jpg)
மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு சாதகமாக இருக்கிறார் என்பது பொய்யான குற்றச்சாட்டு, தி.மு.கவோடு மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல, மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும். என்பது எங்களது எண்ணம் அதற்கு மாநில அரசு கொடுக்கவில்லை என்று சொன்னாலும் மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Bayilvan Ranganathan: நயன்-விக்கி கல்யாணம் இப்படிதான்; மிரட்டினாலும் பேசுவேன் - பயில்வான் பரபரப்பு பேட்டி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion