மேலும் அறிய
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN weather Ditwah Cyclone Update: (28-11-2025): வங்கக் கடலில் உருவாகியுள்ள தித்வா புயலால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை
Source : twitter
TN weather Ditwah Cyclone Update: (28-11-2025): வங்கக் கடலில் உருவாகியுள்ள தித்வா புயலால், 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தித்வா புயல் நிலவரம்:
வானிலை மையம் அறிக்கையின்படி, கடந்த 6 மணி நேரத்தில் கடலோர இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி புயல் திட்வா வடக்கு-வடமேற்கு நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து இன்று, நவம்பர் 28, 2025 அன்று காலை 02.30 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டது. அட்சரேகை 8.1°N மற்றும் தீர்க்கரேகை 81.2°E, திருகோணமலைக்கு (இலங்கை) தெற்கே சுமார் 50 கிமீ, மட்டக்களப்பிற்கு (இலங்கை) வடமேற்கே 70 கிமீ, ஹம்பாந்தோட்டாவிற்கு (இலங்கை) வடக்கே 220 கிமீ, புதுச்சேரிக்கு (இந்தியா) தென்கிழக்கே 460 கிமீ மற்றும் சென்னைக்கு (இந்தியா) தென்கிழக்கே 560 கிமீ தொலைவில் உள்ளது. இது இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை
தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை:
29-11-2025: வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-11-2025: வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
28-11-2025 காலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் 29-11-2025 காலை முதல் 30-11-2025 வரை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 01-12-2025 முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















