மேலும் அறிய

Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்

இலங்கையில் தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் மாயமாகியுள்ளனர்.

இலங்கையில் தொடர் கனமழை பெய்து வருவதால், பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலி

இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும், சில இடங்கில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 44 பேரை காணவில்லை என்றும் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழையால் மொத்தம் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய மாகாணத்தில் தேயிலை அதிகம் பயிரிடப்படும் மலைப் பகுதி மாவட்டமான பதுல்லாவில் அதிக அளவாக 19 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல், கேகாலை மற்றும் நுவரெல்லா மாவட்டங்களிலும் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையின் மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பாறைகளும் மரங்களும் தண்டவாளங்களில் விழுந்ததை அடுத்து பல இடங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், கடும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், தொடர் கனமழையால் 1,158 குடும்பங்களும், 4,008 தனி நபர்களும் பாதிப்படைந்து உள்ளனர். 3 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன. 381 வீடுகள் பகுதியளவாக சேதமடைந்து உள்ளன. 131 பேர் தற்காலிக பாதுகாப்பான மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசர உதவிக்கு 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, மீட்பு பணிகளை முடுக்கி விடும்படியும் மற்றும் தடையில்லா நிவாரண உதவி கிடைக்கவும் வழி செய்யும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவு

இதனிடையே, இந்த துயர நிகழ்வு குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இலங்கையில் சமீபத்திய நிலச்சரிவுகள் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பெரும் சேதங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது என்று கூறியுள்ளது. மேலும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கை மக்களுக்கு எப்போதும் துணையாக நிற்போம் என்றும் தெரிவித்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget