மேலும் அறிய

Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது வேறு வழக்குகளில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட 3 வழக்குகளில், 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தற்போது இந்த தண்டனையும் சேர்ந்துள்ளது. ஒருவேளை அவர் மரண தண்டனையிலிருந்து தப்பினாலும், இனி வாழ்நாள் முழுவதும் அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில், அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், விதிமுறைகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஊழல் நடந்துள்ளதாகவும் ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்டப்பட்டு, 3 தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.

ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதால் விசாரணைக்கு ஆஜராகாத நியில், இந்த வழக்குகளை தாமாகவே விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அப்துல்லா அல் மமும், 3 வழக்குகளிலும் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்தார். மேலும், அவருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை என, மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அதோடு, இதே வழக்கில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாகீத்துக்கும், மகள் சயிமா வாஜீத்துக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மாணவர் போராட்ட விவகாரத்தில் ஏற்கனவே மரண தண்டனை

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரிய வன்முறை வெடித்து, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் புதிய அரசு அமைந்த நிலையில், அவர்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல ஷேக் ஹசீனா உத்தரவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தான், தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது என்று சொல்வது போல், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒருவேளை அவர் ஏதோனும் ஒரு வழியில் மரண தண்டனையிலிருந்து தப்பினாலும், மீதமுள்ள தனது வாழ்நாளை சிறையில் தான் கழிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget