Madurai ; மதுரையின் கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - உயிர் தப்பிய பக்தர்கள் !
பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் சந்தன மாரியம்மன் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலில் திருவிழா கடந்த ஒரு வாரமாக வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் கோயில் திருவிழாவிற்காக கோயிலை சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு விழா கமிட்டி சார்பாக பட்டாசு வெடிக்க பட்டதாக கூறப்படுகிறது.
#மதுரை மேலவாசல் பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் திருவிழா கடந்த ஒரு வாரமாக வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், கோவில் திருவிழாவிற்காக பந்தல்கள் அமைக்கப்பட்டது. இதன் மேல் #பட்டாசு வெடித்து #தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. | @abpnadu | pic.twitter.com/LKLiwkmr6Y
— Arunchinna (@iamarunchinna) June 9, 2022
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களின் வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமானது இதுமட்டுமல்லாமல் கோயிலை சுற்றி இருந்த பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய இரண்டிற்கு மேற்பட்ட கடைகள் முழுமையாக எரிந்து நாசமானது.@UpdatesMadurai @Act4madurai @sapiens_2k @maduraites @mani9726 .......
— Arunchinna (@iamarunchinna) June 9, 2022