மேலும் அறிய
Madurai: தமிழகத்திற்கு போதுமான நிதி கிடைக்கிறது - மதுரையில் அண்ணாமலை விளக்கம்
தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது, 36 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறோம்; அண்ணாமலை மதுரையில் பேட்டி.
அண்ணாமலை
அறநிலைத் துறை இருக்கிறதா?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: திருப்பதி போனால் ஒருநாள் முழுவதும் நிற்பார்கள். தற்போது என்ன பிரச்னை என திருச்செந்தூரில் அறநிலையத்துறை அமைச்சர் பேசுகிறார். உள்ளத்தில் இருப்பது தற்போது வெளியில் வந்துள்ளது என சேகர்பாபுவை சாடினார். கோயிலுக்கு செல்லக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உண்டியல் வசூல் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் அடிப்படை வசதிகள் இல்லை என்றார். தமிழகத்தில் அறநிலையத்துறை இருக்கிறதா ?? சேகர் பாபு நடவடிக்கைதான் அதற்கு சாட்சி என்றார்.
செலெக்ட்டிவ் அமானுஷ்யா
ஒரு சமுதாயத்தினுடைய ஓட்டு வேண்டும் என்பதற்காகத்தான் பாஜகவைவிட்டு அ.தி.மு.க.வினர் விலகினர். மைனாரிட்டி இடமிருந்து வாக்கு வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜகவை விட்டு பிரிந்தது, நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் அனைவருமே ஆதரவு தருவார்கள். கொள்கை ரீதியாக அரசியலை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம், அறநிலையத்துறை அகற்றுவோம் என்கின்ற நிலையை எத்தனை கட்சிகள் ஏற்றுக்கொள்ளும், என்றார். எங்களைப் பொறுத்தவரை ஒரு தனி பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது. திமுகவினரை பற்றி ஒன்றுமே புரியவில்லை. செலெக்ட்டிவ் அமானுஷ்யா என்கின்ற ஒரு நோய் வந்துவிட்டதோ என்ற ஒரு சூழ்நிலை உள்ளது போல தெரிகிறது.
அதிகமாக நிதி ஒதுக்கப்படும்
தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது, 36 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர் தங்கம் தென்னரசு எந்தத் திட்டத்திற்கும் அவர்கள் நிதி ஒதுக்கவில்லை என்று தெளிவாக சொல்லுங்கள். - தங்கம் தென்னரசு குறித்து திமுக அமைச்சர்கள் குறித்து ஒன்றுமே புரியவில்லை. இவர்களுடைய அரசியலுக்காக மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும், சென்னை மெட்ரோ கொடுத்த கேள்விக்கு ? காதுகளில் பஞ்சு வைத்து அடைத்திருக்கிறார்களா இல்லை கண்களை மூடி இருக்கிறார்களா..? வரும் மத்திய அரசு பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவர்களுடைய ஆட்சியின் அவலத்தை மறைப்பதற்காக மத்திய அரசு இது குறை சொல்லி வருகிறார்கள்.
ஆகம விதிப்படி கும்பாபிஷேகம்
ஒரே குடும்பத்தில் மாறி மாறி நிறுத்தினால் மக்களுடைய நிலைப்பாடு தான் என்ன? எங்களை பொறுத்தவரை 9 மாதத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் ஒரு வேண்டாத வேலை., என்று இந்த தேர்தலை நாங்கள் பார்க்கின்றோம். பிரதமர் இங்கே வந்தவுடன் முதலமைச்சர் போட்டி போட்டு கை கொடுக்க கவனம் செலுத்துகிறார்., ஆனால் போட்டியை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்ட வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆளுநர் மீது ஆபாசமாக போஸ்டர் ஒட்டுவதும் ...வசை பாடுவது குறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? திமுக ஆட்சியின் மீது இருக்கக்கூடிய வெறுப்பை மறைப்பதற்கு ஆளுநரை பகடைக்காய் காட்டுகிறார்கள். கோயில் பொறுத்தவரை தவறான கையாடல் இவர்களிடத்தில் இருக்கிறது. கோயிலை மட்டும் ஆகம விதிப்படி ஒரு முறையான கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion