மேலும் அறிய
அதிமுக தொண்டர்கள் பாஜகவை மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்க மாட்டார்கள் - அண்ணாமலை பதில் !
எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வேண்டும் என எப்படி நாங்கள் உயிரைக் கொடுத்து உழைக்கப் போகிறோம். - அண்ணாமலை சொல்லவருவது என்ன?

அண்ணாமலை
Source : whats app
Ongc மத்தியில் இருக்கும் நிறுவனம் ஆனால் அந்தந்த மாநில அரசுதான் அனுமதி கொடுப்பதை முடிவு செய்ய வேண்டும் - எனவும் தெரிவித்தார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில்...,” ஆணவக் கொலைகள் மீது பாஜக மிகுந்த கோவத்தில் உள்ளோம். தவறு செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அலுவலகத்திலும் எத்தனையோ பேர் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள் எனக்குத் தெரிந்தே. நியாயமான முறையில் செய்ய வேண்டும் என ஆய்வாளர்களிடம் நாங்கள் சொல்லி இருக்கிறோம். எனவே இதை நாங்கள் செய்கிறோம் என பெருமையாக சொல்லிக்கொள்ள தேவையில்லை. கட்சி அலுவலகம் என்பது அனைத்து ஜாதி மதத்திற்கும் பொதுவானது தான். பாஜக அலுவலகத்திற்கு இது போல் யார் வந்தாலும் நாங்களும் வரவேற்கிறோம் நியாயமாக நடந்து கொள்வோம்.
கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும்
ஆனால் கட்சி அலுவலகத்திற்கு வருவதை விட இது சமுதாயத்தில் உள்ள புற்றுநோய் பிரச்சனை. இது இந்து சமுதாயத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை இந்த ஜாதி பிரச்சனை. கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து அரசு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர் ஜாதியை வைத்து கொலை செய்தால் அவரை மைனராக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது எனது கருத்து. சில கொலைகளுக்கே அவர் 18 வயதுக்கு கீழ் இருந்தால் அவர் மைனர் இல்லை. ஆனால் நான் 16 வயதிலேயே சாதிக்காக கொலை செய்து விட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்வேன் என்றால் அதை ஏற்றுக்கொள்ள கூடாது. ஏனென்றால் 16 வயது 17 வயதிலேயே ஜாதி வன்மத்தை பார்க்க முடிகிறது கையில் கயிறு கட்டி செல்கிறார்கள். பள்ளியில் அருவா கலாச்சாரம் உள்ளது ஜாதியை வைத்து கூட்டம் சேர்க்கிறார்கள். திராவிட மாடலாச்சி என்று சொல்கிறோம், ஜாதியை ஒழிப்பதற்காக திராவிடம் வந்தது என்று சொல்கிறோம், ஆனால் 2025-ல் இந்த பிரச்சனை உள்ளது என்றால் அது தோற்றுவிட்டது என்று தானே அர்த்தம். அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாஜக உறுதியாக உள்ளோம்.
இரண்டாவது, மூன்றாவது வருவதற்கு கட்சி நடத்துகிறார்.
ஆக்டர் விஜய், அரசியல் தலைவர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கும் திமுகவுக்கும் போட்டி என்று சொல்லவில்லை என்றால் எதற்கு கட்சி ஆரம்பித்தீர்கள் என்று நீங்கள் கேட்பீர்கள் தானே. எல்லா அரசியல் கட்சியின் தலைவர்களும் இதை சொல்வது இயல்புதான். போட்டி என்பது மக்களுக்குத் தெரியும் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரவுள்ளது என்பது மக்கள் மனதில் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வாக்கு செலுத்தி வாக்கு பெட்டியில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடி வர வேண்டுமே தவிர மக்கள் மனதில் பேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. ஆனால் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருடைய கட்சி வளர்ச்சிக்காக அவர் சொல்கிறார். சொல்வதில் தவறு எதுவும் இல்லை. இரண்டாவது, மூன்றாவது வருவதற்கு கட்சி நடத்துகிறார்.
நல்ல மனிதராக வரவேண்டும்.
யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் வாங்க கூடாது என்பது அவரின் தனிப்பட்ட இயல்பு. என்னைப் பொறுத்தவரை டிஆர்பி ராஜா அவர்களின் மகன் எங்கிருந்தாலும் சாதனை செய்து பெரிய மனிதராக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். என் கையில் வாங்க மறுத்துவிட்டார் என்பது எனக்கு முக்கியமில்லை நல்ல மனிதராக வரவேண்டும்.
கூட்டணி குறித்த கேள்விக்கு
அதிமுக தொண்டர்கள் பாஜகவை மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்க மாட்டார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வேண்டும் என எப்படி நாங்கள் உயிரைக் கொடுத்து உழைக்கப் போகிறோமோ, அதே போல அதிமுக தொண்டர்களும் பாஜகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான் பரஸ்பர அண்ணன் தம்பிக்கான மரியாதை.
ஒரே உடம்பில் இரு கைகள் சண்டை
தமிழ்நாடு அரசு கையில் தான் சுற்றுச்சூழல் கமிட்டி உள்ளது. அவர்களே அதற்கு கிளியரன்ஸ் கொடுத்து விட்டு ஒரு கை இப்படி கொடுத்து விட்டு, மற்றொரு கை தங்கம் தன்னரசு நிறுத்து என்று சொல்கிறார்கள். ஒரே உடம்பில் இரண்டு கை சண்டை போடுவதை எப்படி நாங்கள் பொறுப்பாக முடியும். தமிழகத்திற்கு ஓஎன்ஜிசி வேண்டாம் என்றால் செய்ய வேண்டாம், மக்களுக்கு வேண்டாம் என்றால் செய்ய வேண்டாம் நீங்களே ஒருபுறம் அனுமதி கொடுத்துவிட்டு நிதித்துறை எதிர்க்கிறீர்கள் ஏன் அது உங்கள் தொகுதி என்பதால். முதல்வர் இந்த பிரச்சனையை முடித்து வைத்து, இரண்டு பக்கமும் வண்டிய இழுக்காமல் நேர் வழியில் செல்லுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. Ongc மத்தியில் இருக்கும் நிறுவனம் ஆனால் அந்தந்த மாநில அரசுதான் அனுமதி கொடுப்பதை முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்





















