திண்டுக்கல்: கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
திண்டுக்கல் , நிலக்கோட்டை அருகே தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. அவருடைய மனைவி துர்காதேவி. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இந்த தம்பதிக்கு ரத்திகா (வயது 1½) என்ற குழந்தை இருந்தது.
INDvsNZ 2ND ODI LIVE: ஹாமில்டன் மைதானத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியாளர்கள்
இந்தநிலையில் கணவன்,மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தனது கணவரிடம் கோபித்து கொண்டு, குழந்தையுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு துர்காதேவி வெளியேறினார். பின்னர் அவர் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் தனது மாமா பாலு வசிக்கிற தோட்டத்துக்கு குழந்தையுடன் துர்காதேவி சென்றுள்ளார்.
தோட்டத்து வீட்டில் தனது குழந்தையுடன் அவர் தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, அங்கிருந்த கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்துள்ளது.
முதல் டீமாக வெளியேறிய கத்தார் அணி… போட்டியை நடத்தும் அணியே குரூப் சுற்றோடு வெளியேறிய சோகம்!
இதனையடுத்து துர்காதேவி மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையை காணவில்லை என தேடியுள்ளனர். இருப்பினும், ரத்திகா பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு நேற்று விரைந்தனர்.
பின்னர் கிணற்றில் இறங்கி குழந்தையை தேடினர். அப்போது கிணற்றுக்குள் இருந்து குழந்தை ரத்திகாவின் உடல் மீட்கப்பட்டது. கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார், ஆய்வாளர் பாலமுத்தையா தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ரத்திகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்