முதல் டீமாக வெளியேறிய கத்தார் அணி… போட்டியை நடத்தும் அணியே குரூப் சுற்றோடு வெளியேறிய சோகம்!
மற்றொரு குரூப் ஏ ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஈக்வடார் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததால் கத்தாரின் வெளியேற்றம் உறுதியாகியுள்ளது.
உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் நாடு துவங்கிய ஆறு நாட்களில் தொடரை விட்டு வெளியேறியது. இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற அந்த அணி, நேற்றைய போட்டியோடு வெளியேற்றப்பட்டது.
கத்தார் வெளியேற்றம்
தொடக்க ஆட்டத்தில் ஈக்வடாரிடமும், வெள்ளியன்று செனகலிடமும் தோல்வியடைந்த கத்தார் அதன் குழுவில் முதல் இரண்டு இடங்களுக்குள் வர முடியாத நிலையில் உள்ளதால் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. கத்தார் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம், செனகல் நேற்று கத்தார் அணிக்கு இரண்டாவது தோல்வியை தந்தது. இந்த போட்டியில் கத்தார் மாற்று வீரர் முகமது முன்டாரி மூலம் ஒரே ஒரு கோல் அடித்தது. உலகக் கோப்பையின் 92 ஆண்டுகால வரலாற்றில் போட்டியை நடத்தும் நாடுகளின் ஆரம்பகால வெளியேற்றம் இதுதான். மற்றொரு குரூப் ஏ ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஈக்வடார் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததால் கத்தாரின் வெளியேற்றம் உறுதியாகியுள்ளது.
92 வருடத்தில் மோசமான அணி
நெதர்லாந்து இந்த போட்டியை வென்றிருந்தால் கூட கத்தார் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடும். ஆனால் டை ஆனதால் கத்தாரின் 12 வருட காத்திருப்பு மண்ணோடு மண்ணானது. இதன் மூலம் 92 வருட உலகக் கோப்பை வரலாற்றில் மிக மோசமாகச் செயல்படும் அணியாக கத்தார் மாறியுள்ளது.
எழும் விமர்சனங்கள்
மறுபுறம், செனகல் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில் தற்போது கத்தார் வெளியேறியதால் அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். வளைகுடா நாடுகளுக்கு போட்டியை நடத்தும் வாய்ப்பை வழங்கும் யோசனைக்கு முன்னரே பல விமர்சனங்கள் எழுந்தன. தற்போது முதல் ஆளாக வெளியேறி மேலும் சங்கடத்திற்கு உள்ளாகி உள்ளது. இதுவரை உலகக்கோப்பை நடத்திய நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக மிகவும் மோசமான சாதனையை செய்துள்ளது.
$220 பில்லியன் செலவு
போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த முதல் போட்டியை நடத்தும் அணியாக இது ஏற்கனவே சோதனை வரலாற்றை உருவாக்கியுள்ளது. இது தவிர 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி குரூப் ஸ்டேஜில் வெளியேற்றப்பட்ட மற்றொரு போட்டியை நடத்திய அணியாகும். ஆனால் அப்போது தென்னாப்பிரிக்க அணி குறைந்தபட்சம் ஒரே ஒரு வெற்றியுடனாவது வெளியேறியது. மதிப்பீட்டின்படி, மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த முதல் உலகக் கோப்பையான இதில், கத்தார் சுமார் $220 பில்லியன் செலவு செய்துள்ளது. ஆனால் பெரும் செல்வம் மட்டுமே உலகத் தரம் வாய்ந்த கால்பந்து அணியை உருவாகாது முடியாது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.