மேலும் அறிய
மதுரையின் 5 முக்கிய கோரிக்கை ஏற்றது தென்னக ரயில்வே - சு.வெங்கடேசன் நன்றி !
ஆறு புதிய ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு செய்ததோடு, மதுரையை மையப்படுத்திய ஐந்து கோரிக்கைகளை ஏற்று கொண்டதற்காக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

சுவெங்கடேசன்._(2)
இந்திய ரயில்வே சாதாரண பயணிகள் ரயில் வண்டிகளை இயக்க வேண்டும் என சுட்டிக்காட்டி அவற்றை இயக்கிட ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடந்த ஆகஸ்ட் 11- ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதே போல் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைனவ் அவர்களிடம் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராச்சாமியும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று 3 சாதாரண பயணிகள் இரயிலையும், 3 விரைவு இரயில்களையும் இயக்க தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே வாரியத்திடம் கோரியுள்ளது.
இதை கவனிக்க மறக்க வேண்டும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

அதனடிப்படையில் மதுரை - போடிநாயக்கனூர், திண்டுக்கல் - கோவை, திருவாரூர் - காரைக்குடி ஆகிய பயணிகள் ரயில் வண்டிகள் புதிதாக இயக்கப்பட உள்ளதாகவும், மேலும் தாம்பரம் - செங்கோட்டை, மதுரை - இராமேஸ்வரம், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வழியாக செல்லும் புதிய விரைவு வண்டிகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர சென்னை சென்ட்ரல் முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு வண்டியை போடி நாயக்கனூர் வரை நீட்டிக்க வேண்டுமென்றும், திருவனந்தபுரம் முதல் மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு வண்டியை இராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும் தென்னக இரயில்வே அனுமதி கோரியுள்ளது.

மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை ஒலிம்பிக் வீராங்கனை வீரமணி ரேவதிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு !
தென்னக இரயில்வேயின் இக்கோரிக்கையை இரயில்வே வாரியம் ஏற்று விரைவாக உத்தரவிடவேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும், தென்னக இரயில்வேயின் இந்த கோரிக்கைகளில் ஐந்து வண்டிகள் மதுரை சார்ந்து இயங்கும் வண்டிகளாக இருப்பதால் எனது நன்றியை தென்னக இரயில்வேக்கு தெரிவித்துக் கொள்வதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion