மேலும் அறிய

மதுரை: முதல் காலாண்டில் மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து 35% அதிகரிப்பு

கடந்த ஜூன் மாதம் மட்டும் தெற்கு ரயில்வே 3.114 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மதுரை கோட்டம் சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூபாய் 78.54 கோடி ஈட்டியுள்ளது. இதுகடந்த ஆண்டை காட்டிலும் 35.04 சதவீதம் அதிகமாகும். மேலும் ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் 33.14 சதவீதம் அதிகமாகும். இந்த காலாண்டில் 7.16 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

 
விவசாய உரம் 3.26 லட்சம் டன்களும், சுண்ணாம்புக்கல் 1.04 லட்சம் டன்களும், டிராக்டர்கள் 0.70 லட்சம் டன்களும், நிலக்கரி 0.55 லட்சம் டன்களும், மரக்கரி மற்றும் சரளை கற்கள் தலா 0.34 லட்சம் டன்களும், ஜிப்சம் மற்றும் சோயா பீன்ஸ் தலா 0.08 லட்சம் டன்களும், ரயில்வே துறை பொருட்கள் 0.76 லட்சம் டன்களும் சரக்கு ரயில்கள் மூலம் இந்தக் காலாண்டில் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் செயல்பட்டு வரும் வர்த்தக வளர்ச்சி குழுவின் தொடர் முயற்சியால் புதிய புதிய பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

மதுரை: முதல் காலாண்டில் மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து 35% அதிகரிப்பு
 
அவை கட்டுமானத்திற்கான சரளை கற்கள், உணவுப் பொருள் தயாரிப்பிற்கான சோயா பீன்ஸ், வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மரக்கரி, தென்மேற்கு ராஜஸ்தான் பகுதிக்கு அனுப்பப்படும் டிராக்டர்கள், சிமெண்ட் தயாரிப்பிற்கு பயன்படும் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்ஸம் ஆகியவை ஆகும். இவை இந்த காலண்டில் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு ரூபாய் 25.63 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய உபயோகத்திற்கான உரம் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு ரூபாய் 42.24 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மதுரை: முதல் காலாண்டில் மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து 35% அதிகரிப்பு
கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 சதவீதம் அதிகம். ரயில்வே வாரிய இலக்கை விட 30.34 சதவீதம் அதிகம். தெற்கு ரயில்வே அளவில் சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூபாய் 922 கோடி ஈட்டப்பட்டுள்ளது‌. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36 சதவீதம் அதிகம். கடந்த ஜூன் மாதம் மட்டும் தெற்கு ரயில்வே 3.114 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகம் ஆகும்.
 
 
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget