மேலும் அறிய

RTI :கணவரின் சம்பளத்தை தெரிஞ்சுக்க இந்த பொண்ணு செஞ்ச காரியத்தை பாருங்க..!

சமீபத்தில் ஒரு பெண் தனது கணவரின் வருமான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டது அரங்கேறியுள்ளது.

நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?' போன்ற கேள்விகள், நம்மில் பெரும்பாலோர் அனைவருடனும் விவாதிக்க விரும்ப மாட்டார்கள். இத்தகைய தகவல்கள் பொதுவாக குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படும். இருப்பினும், திருமண உறவை பொறுத்தவரை, விஷயங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளது.

 

நீங்கள் விவாகரத்து கோரும்போது, நீங்கள் உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படலாம். இருவருக்கும் இடையே சொத்துக்கள் பிரிக்கப்படும். விவாகரத்து பரஸ்பரம் இல்லாதபோது, ​​சில சமயங்களில், மனைவி தன் கணவரிடம் வருமான விவரங்களைக் கேட்டு, ஜீவனாம்சம் பெறலாம்.

கணவர் வருமான விவரங்களை வெளியிட மறுத்தால், மனைவி வேறு வழிகளில் அதை தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் ஒரு பெண் தனது கணவரின் வருமான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டது அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கணவரின் நிகர வரிவிதிப்பு வருமானம்/மொத்த வருமானம் குறித்த பொதுவான விவரங்களை 15 நாட்களுக்குள் மனைவிக்கு வழங்குமாறு வருமான வரித்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

சஞ்சு குப்தா என்ற பெண் தனது கணவரின் வருமான விவரங்களைக் கோரி ஆர்டிஐ தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது. ஆரம்பத்தில், மத்திய பொதுத் தகவல் அலுவலர் (CPIO), பரேலி வருமான வரித் துறை அலுவலகம், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார். ஏனெனில், கணவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

முதல் மேல்முறையீட்டு ஆணையத்தில் (FAA) அப்பெண் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், மத்திய பொதுத் தகவல் அலுவலரின் உத்தரவு செல்லும் என முதல் மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, மத்திய பொதுத் தகவல் அலுவலரிடம் அந்த பெண் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கடந்தகால உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் சிலவற்றை ஆய்வு செய்து செப்டம்பர் 19, 2022 அன்று தனது உத்தரவை வழங்கியது மத்திய தகவல் ஆணையம். 15 நாட்களுக்குள், கணவரின் வருமானம் பற்றிய விவரங்களை மனைவிக்கு வழங்குமாறு மத்திய பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Ind US: ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?
ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
Driving License: ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
Embed widget