மசாலா அரைக்கவும், சார்ஜ் செய்யவும், மின்வாரிய அலுவலகத்துக்கு புறப்பட்ட நபர் இவர்தான்.. ஏன் தெரியுமா?
தொடர் மின்வெட்டால் சலிப்படைந்து, கர்நாடகாவில் உள்ள ஒருவர் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தினமும் மசாலா அரைக்கவும், போனை சார்ஜ் செய்யவும் சென்று வருகிறார்.
மின்வெட்டால் எரிச்சல் அடைந்த கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் மசாலா அரைக்க மற்றும் செல்போனை சார்ஜ் செய்ய தினமும் மின்சார அலுவலகத்திற்குச் சென்ற வினோத சம்பவம் வெளியாகியுள்ளது.
மின்வெட்டால் எரிச்சல்
நம் நாட்டில், குறிப்பாக கோடைக்காலத்தில் மின்வெட்டு என்பது மிகவும் பொதுவானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. கடுமையான வெப்பத்துடன் கூடிய நீண்ட மணிநேர மின்வெட்டு மக்களின் துயரங்களைச் சேர்ப்பதால் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. நீண்ட நேர மின்வெட்டால் எரிச்சலடைந்த கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் வசிப்பவர், அதற்கு அசாதாரணமான தீர்வைக் கண்டுபிடித்தார். எம்.ஹனுமந்தப்பா என்பவர், தனது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தினமும் மசாலா அரைக்கவும், தனது செல்போனை சார்ஜ் செய்யவும் செல்கிறார். இது 10 மாதங்களாக நடந்து வருவது ஆச்சரியமாக உள்ளது
ஹனுமந்தப்பா செய்த காரியம்
ஹனுமந்தப்பாவின் குடும்பம் ஒரு நாளைக்கு 3-4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் பெறுகிறது. இதனால் அவர்கள் நாள் முழுவதும் இருளில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டிற்கு சரியான மின்சாரம் இல்லை என்று புகார் அளித்தார். ஆனால் பயனில்லை. அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு அதிகாரி ஒருவர் அவ்வாறு செய்யச் சொன்னதை அடுத்து அவர் இந்த அசாதாரண நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தார்.
“மசாலாவை அரைத்து, வீட்டில் எப்படி உணவு சமைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நமது செல்போன்களை எப்படி சார்ஜ் செய்ய வேண்டும்? இது ஒரு அடிப்படைத் தேவை, இதற்காக நான் தினமும் என் பக்கத்து வீட்டிற்குச் செல்ல முடியாது” என்று ஹனுமந்தப்பா கூறினார். அதற்கு அதிகாரி, ”அப்படியானால் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று மசாலாவை அரைக்கவும்”என்றார்.
தினமும் அலுவலகத்தில் மசாலா அரைக்கிறார்
அதிகாரியின் வார்த்தைகளை சீரியஸாக எடுத்துக் கொண்ட ஹனுமந்தப்பா, சில செல்போன் சார்ஜர்கள், மிக்ஸி மற்றும் ஜாடியுடன் மங்களூர் மின் துறை அலுவலகத்திற்குச் சென்று வருகிறார். அலுவலகத்தில், அவர் தனது மிக்ஸியைப் பயன்படுத்தி மசாலாப் பொருட்களை அரைக்கிறார். தனது செல்போனை சார்ஜ் செய்கிறார் மற்றும் அலுவலகத்தில் மின்சாரம் தொடர்பான அனைத்து வேலைகளையும் பட்டப்பகலில் செய்கிறார்.
ஹனுமந்தப்பா தனது வீட்டிற்கு முறையான மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் மற்றும் ஒவ்வொரு அதிகாரிக்கும் கோரிக்கை வைத்துள்ளார். ஒரு மாதத்திற்குள் சரியான மின்சாரம் கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் அவருக்கு உறுதியளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்