Valarmathi: இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி திடீர் மறைவு.. விஞ்ஞானிகள் இரங்கல்
Valarmathi: இஸ்ரோவில் ராக்கெட் விண்ணில் ஏவுப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார்.
இஸ்ரோவில் ராக்கெட் விண்ணில் ஏவுப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார்.
கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக பணியாற்றியவர். கடைசியாக கடந்த ஜூலை 30-ம் தேதி PSLV C562 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது அதற்கான கவுண்டவுன், ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது வரையிலான நிலைகள் பற்றி விரிவாக வர்னணை செய்தார்.
50 வயதை கடந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வளர்மதி மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்தார். கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யிஊனிகேஷன் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருந்தார்.
இதையும் படிக்க.. Vikram Lander: கொடுக்கப்பட்ட பணியை காட்டிலும் அதிகமாக சாதித்த சந்திரயான் 3.. லேண்டர் மீண்டும் வெற்றிகரமாக தரையிறக்கம்..
1984-ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் இன்சாட் 2ஏ, ஐ.ஆர்.எஸ். ஐ.சி., ஐ.ஆர்.எஸ். ஐடி. டி.இ.எஸ்., ஆகிய இஸ்ரோவின் திட்டங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட RISAT-1 2012-ல் விண்ணில் ஏவப்பட்டபோது திட்ட இயக்குநராக வளர்மதி இருந்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் வழங்கிய விருது இவருக்கு 2015-ல் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க..