Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்து வரும் சூழலில், மேலும் ஒரு பாலம் கட்டிக் கொண்டிருக்கும்போதே இடிந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bihar Brdge Collapse: பீகாரில் கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள், கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்த சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்து விழுந்த பாலம்:
பாலம் சரிய காரணம் என்ன?
பாலம் கட்டப்பட்டு வரும் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால், 25 மீ நீளமுள்ள ஒரு தூண் எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. பீகார் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், சமீபத்திய விபத்துகளை குறிப்பிட்டு ஆளுங்கட்சியை கடுமையாக சாடிவருகிறார்.
தேஜஸ்வி யாதவ் கேள்வி
பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான வீடியோவை குறிப்பிட்டு, தேஜஸ்வி யாதவ் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுபானி-சுபால் இடையே பேய் ஆற்றில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. கண்டுபிடித்தீர்களா? இல்லை என்றால், ஏன்? உங்களால் முடிந்தால் தீர்வு காணுங்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
𝟗 दिन के अंदर बिहार में यह 𝟓वाँ पुल गिरा है।
— Tejashwi Yadav (@yadavtejashwi) June 28, 2024
मधुबनी-सुपौल के बीच भूतही नदी पर वर्षों से निर्माणाधीन पुल गिरा। क्या आपको पता लगा? नहीं तो, क्यों? बूझो तो जाने? #Bihar #Bridge pic.twitter.com/IirnmOzRSo
9 நாட்களில் இடிந்து விழுந்த பாலங்கள்:
- கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
- கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கட்டுமானப் பணியில் இருந்த சிறிய பாலம் இடிந்து விழுந்தது.
- ஜூன் 22 அன்று, சிவான் பகுதியில் கண்டக் கால்வாயின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
- ஜூன் 19 அன்று, அராரியாவில் கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பக்ரா ஆற்றில் பல கோடி செலவில் கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் நொடியில் பிரிந்தது.