Morning Headlines: போபாலில் I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்; கர்நாடகாவின் அதிரடி முடிவு - முக்கிய செய்திகள் இதோ!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- Special Session: நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தொடரில் நடக்கப்போவது என்ன? மத்திய அரசு பரபர விளக்கம்
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். ஆனால், தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு அமர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அதேபோல,
பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் படிக்க
- I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்.. பாஜகவின் கோட்டையில் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்
நடப்பு மக்களவை பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவடைய உள்ளதால், மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம், பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மேலும் படிக்க
- Ujjwala Yojana Scheme: உஜ்வாலா திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு; ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு -மத்திய அரசு அறிவிப்பு
உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க 1,650 கோடி நிதி இதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நிருபர்களை சந்தித்தார். மேலும் படிக்க
-
Cauvery Water: ”தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லை"...கர்நாடக தடாலடி...அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!
தமிழ்நாட்டிற்கும் - கர்நாடகாவிற்கு இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதனை சரி செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை வாரியம் வரையறுத்தது. ஆனால், போதிய நீர் இல்லை, கர்நாடக மாநிலத்தில் குடிநீருக்கே பற்றாக்குறை என்ற பல்வேறு காரணங்களை அடுக்கி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் அம்மாநில அரசு பாரப்பட்சம் காட்டி வருகிறது. மேலும் படிக்க
- நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு முன்பு அனைத்துக்கட்சி கூட்டம்.. மத்திய அரசு மெகா பிளான்