ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு எங்கு செல்வது என ஏற்பட்ட தகராறில் தன்னுடைய மாப்பிள்ளை மீது அவரது மாமனார் ஆசிட் வீசியுள்ளார். மகாராஷ்டிராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக திருமணமான தன்னுடைய மாப்பிள்ளை மீது அவரது மாமனார் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹனிமூனுக்கு எங்கு செல்வது என ஏற்பட்ட தகராறில் தன்னுடைய மாப்பிள்ளை மீது அவரது மாமனார் ஆசிட் வீசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் இபாத் அடிக் பால்கே. இவர், குலாம் முர்தாசா கோட்டல் என்பவரின் மகளை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். புதிதாக திருமணமான பால்கே, தனது தேனிலவுக்கு காஷ்மீர் செல்ல விரும்பியுள்ளார்.
புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு:
ஆனால், அவரது மாமனார், தனது மருமகனையும் மகளையும் வெளிநாட்டில் உள்ள புனித தளத்திற்கு செல்ல வேண்டும் என கூறி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், புதன்கிழமை இரவு, வெளியே சென்றுவிட்டு பால்கே வீடு திரும்பினார். சாலையின் அருகே தனது வாகனத்தை நிறுத்தினார். அப்போது, காரில் அவருக்காகக் காத்திருந்த மாமனார் கோட்டல், பால்கேவை நோக்கி விரைந்து வந்து, அவர் மீது ஆசிட் வீசியுள்ளார்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்
மாமனார் வெறிச்செயலுக்கு காரணம் என்ன?
இதில், அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பால்கே உடனான தனது மகளின் திருமண உறவை முறிக்க கோட்டல் விரும்பினார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரை தேடி வருகிறோம்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 124-1 (ஆசிட் பயன்படுத்தியதன் மூலம் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 351-3 (மிரட்டல்) மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் கோட்டல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Pariksha Pe Charcha: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி; கலந்துகொள்வது எப்படி?- விவரம்!