Ujjwala Yojana Scheme: உஜ்வாலா திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு; ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு -மத்திய அரசு அறிவிப்பு
Ujjwala Yojana Scheme: ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு உஜ்வாலா திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க 1,650 கோடி நிதி இதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நிருபர்களை சந்தித்தார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana)
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாக மத்திய 2016-ல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 9.6 கோடி குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் அனுராக் சிங் தாகூர் தெரிவிக்கையில், “ பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யவும், 3 ஆண்டுகளில் 75 லட்சம் கேஸ் இணைப்பு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டார்.
ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அனுராஜ் சிங் தாகூர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இதில் பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பும், ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களும் சந்தை விலைக்கு சிலிண்டர் வாங்க வேண்டும். பின்னர், அதற்கான மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டப் பயனாளிகள் 9.17 கோடி பேருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் 35 லட்சம் உஜ்வாலாதிட்டப் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
VIDEO | "9.60 crore LPG cylinders have been distributed under the Ujjwala scheme till today and I am happy to announce that another 75 lakh free LPG connections will be given so that more poor and needful women can be benefit from the scheme," says Union minister @ianuragthakur. pic.twitter.com/D3At8mUHpC
— Press Trust of India (@PTI_News) September 13, 2023
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க கடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, 14 கிலோ எடையுடைய வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியம் ரூ,400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்போது, கூடுதலாக 75 லட்சம் கேஸ் இணைப்பு மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை ரூ.10.35 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..Rajnikanth:”சட்டவிரோத கைது ஒன்றும் செய்யாது.."ஜெகன் மோகனை சீண்டும் ரஜினி... சந்திரபாபு நாயுடு மகனுக்கு ஆறுதல்!