Morning Headlines: ஜெகத்ரட்சகன் எம்.பி., இடங்களில் ஐடி ரெய்டு.. உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்.. முக்கிய செய்திகள் இதோ..!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- காலையிலேயே அதிரடி.. சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது..
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - ரூ.200 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு என தகவல்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள் உட்பட, சென்னையில் 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பூந்தமல்லி அருகே அமைந்துள்ள ஜெகத்ரட்சகனின் நெருங்கிய நண்பருமேலும் படிக்க க்கு சொந்தமான தனியார் மருத்துவமனையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஆவடி பட்டாபிராமில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், அதனை உடைத்துக்கொண்டு அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். மேலும் படிக்க
- மருந்துகள் பற்றாக்குறையா? பொறுத்துக் கொள்ளவே முடியாது.. கொதித்தெழுந்த மும்பை உயர் நீதிமன்றம்!
மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு மருத்துமனைகளில் 31 பேர் உயிரிழந்த விவகாரத்தை தாமாக முன்வந்து நேற்று விசாரித்தது மும்பை உயர்நீதிமன்றம். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டது. மேலும், இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் விவரம், படுக்கையறைகள், ஊழியர்கள், மருத்துகள் உள்ளிட்ட விவகரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க
- இன்று தொடங்குகிறது உலகக் கோப்பை திருவிழா..! ரூ.83 கோடி பரிசுக்காக களமிறங்கும் 10 அணிகள்
கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசியின் உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இதில் 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் அதைதொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் தொடங்கி சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதுமிருந்து ரசிகர்கள் இந்தியா வர தொடங்கியுள்ளனர். மேலும் படிக்க