(Source: ECI/ABP News/ABP Majha)
Today Headlines 18 dec : 100யை கடந்த ஒமிக்ரான்..நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. இன்னும் பல
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
* முன் ஜாமீன் மனு தள்ளுபடி ரத்து : தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு
* தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
* நெல்லை தனியார் பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு
* மோட்டார் வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 3 ம் தேதி வரை நீட்டிட்டு தமிழக அரசு உத்தரவு
* தமிழகத்தில் 28 பேருக்கு ஒமிக்ரான் தொற்றின் தொடக்க நிலை அறிகுறி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இந்தியா:
* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ கடந்தது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 32 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
* பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 2 வது நாளாக தொடர் போராட்டம் : நாடுமுழுவதும் ரூ. 74,400 கோடி வர்த்தகம் பாதிப்பு
* 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் : வருகின்ற திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
* குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : உயிரிழந்த கேப்டன் வருண் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்
உலகம் :
* போட்டியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று.. `மிஸ் வேர்ல்ட் 2021’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு!
* வட கொரியாவின் முன்னாள் தலைவர் கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு டிசம்பர் 17ம் தேதி அனுசரிப்பு : பொதுமக்கள் சிரிக்க 10 நாடுகளுக்கு தடை
* கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி
விளையாட்டு :
* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல்!
* உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: நம்பர் ஒன் வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார் சிந்து..
* ஆஷஸ் தொடர் 2 வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 473/9 விக்கெட் இழப்பிற்கு டிக்ளர்.. இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழந்து 17 ரன்களுடன் தடுமாற்றம்.
* டி 20 தொடரில் இந்தியாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் - ரிஸ்வான்!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்