மேலும் அறிய
Advertisement
News Wrap : சிறுவர்களுக்கு தடுப்பூசி...! அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்...! தெ.ஆ. டெஸ்டில் தடுமாறும் இந்தியா..! முக்கியச் செய்திகள்...!
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 175 சிறுவர்களுக்கு தடுப்பூசி
- 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
- பார் நடத்துவதற்கான ஒப்பந்தம் விடுவதில் முறைகேடு – அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம்
- பார் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை – அமைச்சர் செந்தில்பாலாஜி
- கோவையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு – நிமோனியாவிற்கு 7 மாதக்குழந்தை உயிரிழப்பு
- தென் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்தியா :
- நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
- விவசாயிகள் எனக்காகவாக உயிரிழந்தனர் என்று பிரதமர் மோடி கேட்டதாக மேகலாயா ஆளுநர் குற்றச்சாட்டு
- விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி ஆணவத்துடன் பேசினார் – மேகலாய ஆளுநர்
- ஒமிக்ரான் வெறும் வைரஸ் காய்ச்சல் போன்றது –உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
- லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் – மத்திகய அமைச்சர் மகன் குற்றவாளியாக சேர்ப்பு
- சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம்
- ஒமிக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கர்நாடக எல்லைகளில் தீவிர சோதனை – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
- ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகள்
உலகம் :
- சூடானில் ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் : பிரதமர் அப்துல்லா ராஜினாமா
- அமெரிக்காவில் தினசரி 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு – சுகாதாரத்துறை தடுமாற்றம்
- பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு 1.02 கோடியாக அதிகரிப்பு
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 29 கோடியைத் தாண்டியது : மொத்த பலி எண்ணிக்கை 54 லட்சமாக அதிகரித்தது
விளையாட்டு :
- தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஜோகன்ஸ்பர்க்கில் இந்திய அணி பேட்டிங்
- முதுகுவலி காரணமாக இரண்டாவது டெஸ்டில் கேப்டன் கோலி விலகல் : முதன்முறையாக டெஸ்ட் போட்டிக்கு கேப்டனானார் கே.எல்.ராகுல்
- தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் தடுமாறி வரும் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion