மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: சுடச்சுட.. காலை 7 மணி தலைப்புச்செய்திகள்...! இதுவரை நடந்தது என்னென்ன?
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- மீனவர்களுக்காக என் வீட்டுக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும் – ஆளுநர் ஆர்.என்.ரவி
- ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு
- சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை செய்வது தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் விதிகளுக்கே உட்பட்டது – முதலமைச்சர்
- அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் – எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
- அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என்பது திருச்சி மாநாட்டில் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம்
- கட்சியை நடத்த வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் அண்ணாமலை – அமைச்சர் கே.என்.நேரு
- மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20-ந் தேதி வரை சர்வதேச சர்ஃபிங் ஓபன் போட்டி நடைபெற உள்ளது
- புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் – ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணனிடம் விரைவில் விசாரணை அறிக்கை
- கிருஷ்ணகிரி ஆணவப்படுகொலை சம்பவம் – குற்றவாளி தண்டபாணி வேலூர் சிறையில் அடைப்பு
- கடலூரில் நாடோடி பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்திய தேநீர் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு
- சித்தமருத்துவ மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார் ஆளுநர் – சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- மருத்துவ துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 133 பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியா:
- போதைப்பொருள் தடுப்பு பிரிவு பணிக்குழுவின் முதல் மாநாடு – டெல்லியில் இன்று தொடக்கம்
- கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- கார்த்தி சிதம்பரத்தின் ரூபாய் 11 கோடி சொத்து முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை
- ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் சட்டர் காங்கிரஸ் சார்பில் போட்டி
- ஒடிசாவில் ஜோதியேந்தி மாணவர் காங்கிரசார் போராட்டம்
- தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது – நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
உலகம்:
- அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் துணை பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
- பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
விளையாட்டு:
- ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 25வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஜெய்ப்பூர் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல்
- ஐ.பி.எல். தொடரில் 6 ஆயிரம் ரன்களை கடந்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா புதிய சாதனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion