Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிரபல பொருளாதார வல்லுனரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பேராசிரியர் ராதாமோகன் அவர்களின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் வரும் 14 -ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
TN Lockdown Extension : கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : என்ன இயங்கும், என்ன இயங்காது?
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, முதன்முறையாக நேற்று திருச்சி கல்லணையை ஆய்வு செய்தார். இன்று (ஜூன் 12) சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும் சாட்டை யூட்யூப் தளத்தை நிர்வகித்துவருபவருமான யூ-டியூப் பதிவர் துரைமுருகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். திருச்சியில் ’சமர் கார் ஸ்பா என்ற’ பெயரில் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் வினோத் என்பவர் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி, சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அவரது கடைக்கே சென்று, பிரபாகரன் குறித்த பதிவிற்காக வினோத்தை மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனையடுத்து, நேற்று இரவு வினோத் திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படியில் சாட்டை துரை கைது செய்யப்பட்டார்.
Saattai Durumurugan Arrest | தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் கண்டனம்
பிரபாகரன் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. கைது செய்யப்பட்ட நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 378 ஆக உள்ளது. இதன்மூலம், மாநிலத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்துள்ளது.
களம் இறங்கிய திமுக வழக்கறிஞர் அணி, கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் !
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,21,671ஆக குறைந்துள்ளது . நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, நான்காவது நாளாக, ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 91,702 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,77,90,073 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,34,580 பேர் குணமடைந்தனர்.தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 94.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறித்து ஏற்கனவே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், கவன ஈர்ப்புக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மின்வாரியம் மீது வைப்பதை தவிர்க்கவும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!
இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளனர். இதனிடையே, புதிய வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கை சென்று தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.