SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
PAK VS SA : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்தது
தென்னாப்பிரிக்க அணியை ஒரு நாள் போட்டி தொடரில் முதல் முறையாக ஓயிட் வாஷ் செய்து பாகிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.
ஒரு நாள் தொடர் தொடர்:
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இதில் டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்கிற கணக்கில் வென்று இருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளை வென்று இருந்தது.
இதையும் படிங்க: Jamie overton : சிஎஸ்கேவின் போலார்ட் இவர் தான்! பிக் பாஷ் தொடரில் கலக்கும் ஜேமி ஒவர்டன்..
மூன்றாவது போட்டி:
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி மழையின் காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்தது. இதில் முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது, தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷஃபிக் 1 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பாபர் அசாம் மற்றும் சைம் அயூப் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர், இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர், பாபர் இத்தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சைம் அயூப் சதம்:
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ரிஸ்வானுடன் அயூப் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார், இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 53 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்தனர். இதன் பின்னர் தனது அதிரடியை தொடர்ந்த சைம் அயூப் சதம் அடித்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி இறுதியில் 47 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி தோல்வி:
308 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிர்க்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ஹென்ரிக் கிளாசன் மட்டும் தனி ஆளாக போராடினார், அவர் 43 பந்துகளில் 81 ரன்களில் எடுத்து ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்காவின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது, இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 42 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து இழந்து 36 ரன்களில் தோல்வி ஆடைந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்று தென்னாப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்தது.
Excellent display by the boys 🇵🇰✨
— Pakistan Cricket (@TheRealPCB) December 22, 2024
A 36-run victory in the final ODI to complete a series sweep! ✅#SAvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/T6pO8PK6sO
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட் வாஷ் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சைம் அயூப் வென்றார்.
🌟 Player of the match and player of the series 🌟
— Pakistan Cricket (@TheRealPCB) December 22, 2024
How will you rate @SaimAyub7's scintillating show this series❓#SAvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/CIx50U3nHi