களம் இறங்கிய திமுக வழக்கறிஞர் அணி, கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் !
என்னை தகாத வார்த்தைகளை சொல்லித் திட்டியதோடு மட்டும் அல்லாமல் கொலை வெறியோடு தாக்க வந்தனர். அப்போது மட்டும் நான் தப்பிச் செல்லாமல் இருந்திருந்தால் என்னை அங்கேயே சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கொலை செய்திருப்பர் என தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் வினோத்
நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும் சாட்டை யூட்யூப் தளத்தை நிர்வகித்துவருபவருமான யூ-டியூப் பதிவர் துரைமுருகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருச்சியில் ’சமர் கார் ஸ்பா என்ற’ பெயரில் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் வினோத் என்பவர் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி, சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அவரது கடைக்கே சென்று, பிரபாகரன் குறித்த பதிவிற்காக வினோத்தை மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவதூறாக பேசிய திருச்சி சமர் கார் ஸ்பா நிறுவனத்தை சார்ந்த வினோத் என்பவர் புரிதல் பிழையால் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு அறிவுரை கூறி விடை பெற்றோம்#TamilsPrideLTTE #தலைவர்பிரபாகரன் pic.twitter.com/cRQVcgW5Mj
— Duraimurugan (@Saattaidurai) June 11, 2021
வினோத்தின் கடை மூடப்பட்டுவிட்டதாகவும், அவர் மனநலம் சரியில்லாதவர்கள் என்றும் நாம் தமிழர் கட்சியினர் பலர் தங்களது ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினர்.
மனநலம் சரியில்லாத @vinothpaper கடை மூடப்பட்டது.
— திருச்சி மகிழன் (@Santhosh_Magizh) June 11, 2021
காவல்துறை விசாரித்து நடவடிக்கை.@tiruchisaravana @Saattaidurai pic.twitter.com/RArDqyHTeA
சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவதூறாக பேசிய திருச்சி சமர் கார் ஸ்பா நிறுவனத்தை சார்ந்த வினோத் என்பவர் புரிதல் பிழையால் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு அறிவுரை கூறி விடை பெற்றோம் என பதிவிட்டு’, வினோத் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாம் தமிழர் கட்சியினருக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் ஒருவரை போலீசார் முன்னிலையிலேயே மிரட்டி வீடியோ எடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது ? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையை காவல்துறையும் அரசும்தான் எடுக்க வேண்டும், தண்டனை கொடுக்க இவர்கள் யார் ? என திமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் சாட்டை முருகனுக்கு எதிராக அடுத்தடுத்து ட்வீட்களை தட்டி சாட்டையை சுழற்றியபடியே இருந்தனர்.
ஒருவன் தவறு செய்தேனோ இல்லையோ அதை அரசாங்கமும் ,காவல் துறையும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Jennifer Dr (@JeniiOfficial) June 11, 2021
ஆனால் ரவுடிகள் செய்யலாமா அப்போ இனி எல்லாரும் சட்டத்தை கைகளில் எடுக்கலாமா ??? pic.twitter.com/GM2BvEurME
வினோத்தை மிரட்டி, வீடியோ எடுத்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது ஆளுங்கட்சியாக இருந்தும் கூட, நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது என உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரையெல்லாம் டாக் செய்து அவர்கள் பதிவிட்டவண்ணமே இருந்தனர்.
ஒரு கும்பல் சட்டத்தை கையில் எடுத்திருக்கிறது என்பது தான் பிரச்னை .அது எங்கேயும் யாருக்கும் நடக்க கூடாது . காவல்துறை , சட்டம் இதெல்லாம் இருக்கும்போது இந்த அணுகுமுறை சரியில்லை.
— salma (@salma_poet) June 11, 2021
இந்நிலையில் வினோத்தும் திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதில் ‘தன் கடைக்கு வந்த சாட்டை துரைமுருகன், சரவணன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளில் தன்னை தொலைபேசி மூலம் அழைத்து திட்டியதாகவும், பின்னர் கடைக்கு சென்றபோது கொலைவெறியுடன் தாக்க முயன்றதாகவும், தான் தப்பிச் செல்லாமல் அங்கிருந்தால் நிச்சயம் அவர்கள் தன்னை கொலை செய்திருப்பார்கள் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்’.
இப்படி திமுகவினர், தலைமை மீது அதிருப்தி தெரிவித்து போஸ்ட் போட்டுக்கொண்டிருந்த நிலையில், திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியினர், இது குறித்து விசாரிக்கத் தொடங்கி, சாட்டை துரைமுருகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர்.
கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அய்யா @KN_NEHRU மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் @Vairamani_DMK அவர்களின் ஒப்புதலோடு திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் வழக்கறிஞர் அணி தீவிர முயற்ச்சியால் நான்கு பிரிவுகளின் pic.twitter.com/QvS6G2nGl3
— ஏ.கே.அருண்_TN_45 (@akaruntrichy) June 11, 2021
அதன்பிறகுதான், சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட 4 பேரையும் இரவில் கைது செய்தது திருச்சி கே.கே.நகர் காவல்துறை. இந்த நான்கு பேர் மீதும் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் (143 ,447, 294(b), 506(2), 147 of IPC) வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.