”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!
தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறித்து ஏற்கனவே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், கவன ஈர்ப்புக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மின்வாரியம் மீது வைப்பதை தவிர்க்கவும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மின்கட்டண முறையில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. மேலும், கடந்தாண்டு ஊரடங்கின்போது மின்கட்டணம் செலுத்துவதில் அதிகாரிகள் கவனக்குறைவு மின்மீட்டர் அளவு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்கட்டணம் செலுத்துவதில் பல இடங்களில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க. நிர்வாகியான நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்ற வருட ஊரடங்கின்போது மின்கட்டணங்கள் குறித்து மிகப்பெரிய புகாரை எழுப்பிய தி.மு.க. மற்றும் அதுகுறித்த விவாதம் நடத்திய ஊடகங்கள், இந்த ஊரடங்கில் பன்மடங்கு மின்கட்டணம் வசூலிப்படுவது குறித்து வாய்மூடி மௌனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சென்ற வருட ஊரடங்கின் போது மின்கட்டணங்கள் குறித்து மிக பெரிய புகாரை எழுப்பிய தி மு க மற்றும் அது குறித்து விவாதம் நடத்திய ஊடகங்கள், இந்த ஊரடங்கில் பன்மடங்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?
— Narayanan Thirupathy (@Narayanan3) June 10, 2021
அவருக்கு பதிலளித்துள்ள மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மின்கட்டணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. 1. மே 2019 கட்டணம் 2. கடந்த மாதக் கட்டணம் 3. இம்மாத ரீடிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்பலாம். இம்மூன்றில் ஒன்றை வாடிக்கையாளரே தேர்ந்தெடுக்கலாம். குழப்பங்கள் இருந்தால் தீர்வு காண அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறேன்
மின்கட்டணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 11, 2021
1. மே 2019 கட்டணம்
2. கடந்த மாதக் கட்டணம்
3. இம்மாத ரீடிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.
இம்மூன்றில் ஒன்றை வாடிக்கையாளரே தேர்ந்தெடுக்கலாம்.
குழப்பங்கள் இருந்தால் தீர்வு காண அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறேன்.(1/2) https://t.co/pobvZDztnY
கவன ஈர்ப்புக்காக ஆதாரமற்ற, பொதுப்படையான குற்றச்சாட்டுகளை மின்சார வாரியம் மீது வைப்பதை தவிர்க்கவும்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 11, 2021
அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த துறையாக மாற்றிட கடை நிலைப் பணியாளர் வரை தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
முதலமைச்சர் எங்களிடம் அதைத்தான் வலியுறுத்தி இருக்கிறார். (2/2)
”கவன ஈர்ப்புக்காக ஆதாரமற்ற, பொதுப்படையான குற்றச்சாட்டுகளை மின்சார வாரியம் மீது வைப்பதை தவிர்க்கவும். அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த துறையாக மாற்றிட கடைநிலைப் பணியாளர் வரை தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் எங்களிடம் அதைத்தான் வலியுறுத்தி இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!
தங்களின் விளக்கத்திற்கு நன்றி. ஆதாரமில்லாத குற்றச்சாட்டு அல்ல. பொது மக்களில் பலர் பொதுவாக வைத்த குற்றச்சாட்டே. தங்களின் விளக்கம் தெளிவாக இருந்தாலும், இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அரசின் கடமை. மக்கள் நலனில் அரசோடு இணைந்து பணியாற்றவே என் விமர்சனம். @V_Senthilbalaji https://t.co/5pvyj3KdLs
— Narayanan Thirupathy (@Narayanan3) June 11, 2021
பொதுமக்களில் பலர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டதாகவும், மக்கள் நலனில் அரசோடு இணைந்து பணியாற்றவே என் விமர்சனம் என்று பதிலளித்திருக்கிறார்.