Breaking News LIVE: தமிழகம் வரும் அமித்ஷா - போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே அறிந்து கொள்ளலாம்
LIVE
Background
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? வெளியான தகவலால் பெரும் பரபரப்பு
தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்
மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு என்பது வதந்தி - தமிழக அரசு விளக்கம்
வங்கக்கடலில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் உருவாகி தமிழ்நாட்டை குறிவைக்கும் புயல் சின்னமாக மாறும் என கணிப்பு
தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும் - விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
நெல்லையில் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியில் கேரள அதிகாரிகள் குழு தீவிரம்
சென்னையில் நடக்கும் உணவுத் திருவிழாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் கூட்டம் - மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெறும் விற்பனை
போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை - டிசம்பர் 27, 28ம் தேதி நடைபெறும் என தகவல்
சித்தேரி மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் 63 கிராம மக்கள் போக்குவரத்து பாதிப்பு
தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி
தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்; நாளை, வரும் 31ம் தேதி இயக்கப்படும் என அறிவிப்பு
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த தாம்பரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
இரண்டு நாள் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்பினார்
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சுங்கக் கட்டணத்திற்கு எதிர்ப்பு; கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பேருந்துகள் இயங்காது
செல்போன் டவர் கருவிகளை திருடிய கும்பல் கைது; 8 மாநிலங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்
மத்திய அரசுப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
Breaking News LIVE: தமிழகம் வரும் அமித்ஷா - வரும் 27 காங்கிரஸ் போராட்டம்
வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் மீதும் இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Breaking News LIVE: 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா
வரும் 27ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 28ஆம் தேதி விஜயகாந்தின் முதலமாண்டு நினைவுநாள் ஊர்வலத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 28ஆம் தேதி திருவண்ணாமலையில் பாஜக கட்டட திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
களைகட்டும் கிறிஸ்துமஸ்.. கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி!
டெல்லியில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு சார்பில் ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
Breaking News LIVE: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!
#திராவிடமாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 23, 2024
"அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும்… pic.twitter.com/BXYcA5UJLs
Breaking News LIVE: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நியமனம்!
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம்#NHRC #PresidentDroupadiMurmu #FormerSupremeCourtjudge #Ramasubramanian #NHRCChairman pic.twitter.com/XT0kh8TiYo
— ABP Nadu (@abpnadu) December 23, 2024