"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
2025ம் ஆண்டு டெல்லியில் நடக்கும் குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்க இயலுமா? இயலாதா? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.
முப்படைகளின் அணிவகுப்பின்போது ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அந்தந்த மாநில பெருமைகளை பேசும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் 2025ம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாது என்று தகவல்கள் வெளியாகியது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி
— TN Fact Check (@tn_factcheck) December 22, 2024
2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது.
இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு… https://t.co/IAPGNb8mkR pic.twitter.com/94bpBqH4B0
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கும் பக்கம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி
2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது.
இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது.
2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது.
வதந்தியைப் பரப்பாதீர்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.